மால்

நண்பர்களுக்காக ஸ்கைவாக் மாலில் (Ampa skywalk) காத்துக் கொண்டிருக்கிறேன் !! நண்பர் வரவில்லை....சிலேடை வந்தது....

மால்

இளம்பெண்கள் சூழ இனியவிசை கேட்க
வளமை பெருஞ்செலவில் வாய்க்க - உளம்நிறையக்
காதல் அரங்கேறக் காட்சிக்(கு) எழில்சேர
மாதவம் தானிந்த மால் !!

கருத்து

மால் (ஷாப்பிங் மால், திருமால்) என்றாலே இளம் பெண்கள் சூழ்ந்திருப்பார்...இனிய இசை(ஆங்கிலப் பாடல்கள், குழலிசை) அங்கே கேட்கும்...வளமை (காசு, சிரத்தை) இருந்தால் பெருஞ் செலவும் வாய்க்கும்.....உள்ளம் நிறைக்கும்...காதல் (இளஞ்சமூகத்தின் காதல், இறைவன்மேல் காதல்) அரங்கேறும்...காட்சிக்கு (அடுக்கடுக்கான மாடிகளில், மிடுக்கான அலங்காரத்தில்) எழில் சேரும்...அதனால் மாதவம்(பெரிய தவம், மாதவன்) தான் இந்த மால்......எப்புடீ.....

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:36 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 56

மேலே