இப்படிக்கு உன்னவள்
காதலித்துக் கரம் கோர்க்க ஆசைதான்,
காலம் ஏமாற்றிவிடில் என்செய்வேன்???
காத்திருப்புகளுக்குப் பஞ்சமில்லை
கனவிலாவது கை சேர மாட்டாயா எனும் கலக்கத்தோடு,
மணவறையில் இணை சேரும் நாள் நோக்கி மயக்கத்துடன் காத்திருக்கிறேன்,
எட்டாக்கனியாய் நான் இருந்தும் எட்டிப் பறிப்பாய் எனும் நம்பிக்கையில்,
விழியோரக் கனவுகள் விரதம் இருக்கின்றன
உன் கடைக்கண் ஆகாரத்தை வேண்டி,
நீங்கா அன்புடன் நெற்றி முத்தம் கேட்கிறேன்,
நிழலோடு மாத்திரம் உறவாட விடுகிறாய்,
தோள் சாய வேண்டுகிறேன் சீக்கிரம் வந்து விடு,
மடி சாய்ந்து தூங்க வேண்டும் மறுக்காமல் ஒப்புக்கொள்,
கனவிலும் களம் மாறேன் கண்ணாளனே ,
என்னவன் இருக்க அந்நியன் எதற்க்கு?????