வற்றாத தமிழ் கவி

வற்றாத தமிழ் கவி :

பொழிந்த மேகங்கள் மீண்டும் ஓர்நாள் மழையாகி மண் நனைக்கும்

நனைந்த மண்ணும் மீண்டும் மறுநாள்
துளிர் விட்டு சிலிர்க்கும்

உதிர்ந்த இலைகள் மண்ணோடு உரமாய்
உயிராகிப் பயிர் செழிக்கும்

விண்தூங்கும் நிலவும் பகல் துறந்து
இருள்சூடி ஒளிச் சுரக்கும்

கண் உறங்கா பொழுதெல்லாம் தாலாட்டில்
தலையணையும் துயில் தழுவும்

வெண்மேகம் உலாவி வான் மகளின்
முகம் துடைத்தே பொலிவளிக்கும்

கரைத் தொடும் அலையவளின் நானமோ
மீண்டும் கடலையேச் சேரும்

விடியலின் வேகமோ மங்களக் கதிர்களை
அள்ளித் தெளித்தே வரவேற்கும்

வற்றாத வார்த்தைகளில் என் தமிழும்
உலாவி உள்ளம் கவரும்

எட்டாத எண்ணங்களும் சொல் இசையில்
கவிப் பாடி நடைபயிலுமே...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (23-Aug-17, 3:08 pm)
பார்வை : 395

மேலே