பார்வை கணைகளை என்னை நோக்கி

உன் வீட்டு வாசலுக்கு வந்தவுடன்
தானாகவே என் இருசக்கர வாகனம்
பழுதாகி நின்று விடுகிறது !

கிளம்பமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது !


எங்கே !

ஜன்னலில் நின்றவாறே பார்வை
கணைகளை என்னை நோக்கி வீசி எறி !

இப்பொழுது பார் !

நானும் என் இரு சக்கர வாகனமும்
எப்படி பறக்கிறோம் என்று !

எழுதியவர் : முபா (23-Aug-17, 4:07 pm)
பார்வை : 101

மேலே