பாலிய நண்பர்கள்-132

No. 1:- ஏம்பா ஏன் இப்படி சீத்து பூத்துன்னு மூச்சி இறைக்க ஓடியாரே

No.2 :- சுடுகாடு••• பொணம்••• பேயி••• பிசாசு••• பயம் •••நான்••• எப்படி•••சுடுகாட்ல

No. 1 :- உன் பாலிய நண்பர்கள் நாலுபேரு ராணுவத்தில இருந்து லீவுலே வந்திருப்பது உனக்குத் தெரியாதா••??
அந்த நாலுபேரும் உன்னை பார்க்க வந்தப்போ நீ அசந்து தூங்கியதை கண்டு அந்த கட்டிலோட உன்னை தூக்கிக்கொண்டு போயி சுடுகாட்டில இறக்கி விட்டுவிட்டு வந்துவிட்டு இருக்காங்க

No. 2 :- அவுங்க வந்த விசயம் இந்த ஊருக்கே தெரிஞ்சி இருக்கையில எனக்கு மட்டும் எப்படி தெரியாம போச்சி அதனாலத்தான் என் மேல கோபப்பட்டு இப்படி செஞ்சிருக்காங்க

No. 1 :- பிறகு ••••!

No. 2 :- பிறகு என்ன அவர்கள் பாலிய நண்பர்கள் ஆகையால் அவர்களை
என்னால் கடிந்துக்கொள்ள முடியாது

No. 1 :- இப்படியும் ஒரு விளையாட்டா•••!

எழுதியவர் : ஆபிரகாம் வளாங்கண்ணி (24-Aug-17, 1:19 pm)
பார்வை : 588

மேலே