நீட்டோ நீட்
நீட்டோ நீட்..
1. “ ஆமா, உங்க குழந்தை எல்கேஜி படிச்சிட்டிருந்தாளே, கொஞ்ச நாளா ஸ்கூல் பக்கம் ஆளைக் காணலியே.. எங்கே போறா? ”
“ நீட் கோச்சிங் கிளாசுக்கு அனுப்பி வச்சிருக்கேன்..! ”
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
2. இருந்தாலும் அந்த ஆளுக்கு நீட் பைத்தியம் நல்லாவே பிடிச்சிருக்கு..
ஏன்?
வரப்போகிற மருமகளையும் நீட் வச்சித்தான் செலக்ட் பண்ணுவாராம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
3. இனி மேல் அடுத்த ஆண்டிலிருந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்குப் பதில் புதுடெல்லி நீட்கட்டு போட்டி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^