வீண் நாயகர் சதுர்த்தி

[] வீண் நாயகர் சதுர்த்தி ...
------------------------------------------------------------------

கடவுள் எனும் திரைபடத்தில்
பிள்ளையார் ஒரு கதாபாத்திரம் ..

அன்னை தந்தை சுற்றி
அவர்களே முதல் உலகம் என்று
அந்த கதாபாத்திரம்
சொன்னதை மறந்து
பெற்றோரை மதிக்காமலும் ..

தன் கைக்கு பழம் வந்தபின்னும்
தேவையறிந்து
தன் தம்பிக்கு அதை
தந்துவிட முன் வந்து
அந்த கதாபாத்திரம் சொல்லும்
விட்டு கொடுத்தலை மறந்தும் ..
என்று -

கதாபாத்திரம் சொன்ன
கருத்துக்களை எல்லாம்
மறந்துவிட்டு
கதாபாத்திரங்களை மட்டும்
வணங்குவது தான்
ஆத்திகம் கடவுள் பக்தி என்றால்
அதற்கு நாத்திகமே மேல் ..!


-யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (25-Aug-17, 1:45 pm)
பார்வை : 116

மேலே