மலர் தாவும் பட்டாம் பூச்சியை ரசிப்பதில்

ஒரு கோப்பையின் தேனீர்
முழுவதுமாய் பருகும் வரை
உன் "இதழ் " தித்திப்பை நினைத்தே
பருகிவிடுகிறேன் !


சிறு கனா வில் உன் முகம் தரிசிக்க
பேருந்து பயணத்தின் ஜன்னல் ஒர
இருக்கையில் குட்டி தூக்கம் ஒன்றில்
லயித்து விடுகிறேன் !

பேருந்தின் பின் இருக்கையின் மழலையின்
சிரிப்பை பார்த்து அவ்வப்போது
உன் சிரிப்பை ஒப்பிட்டு அழகு
பார்க்கிறேன் !

பூங்காக்களில் தனிமை இடம் ஒன்றை
தேடி ! அமர்ந்து கொள்கிறேன் !
மலர் மலர் விட்டு மலர் தாவும் பட்டாம் பூச்சியை
ரசிப்பதில் நேரங்களை கடத்தி விடுகிறேன் !

மழை வரும் என்று தெரிந்தவுடன் ..முதல் துளி
ஒன்று என் தேகம் தீண்ட ஆவல் அதிகரித்து விட்டது !
மொத்தமாய் மழையில் நனைந்து !
இதயம் நனைந்தவனாய் இன்புறுகிறேன் !

அதிகாலை உறக்கம் அவசியமாய் படுகிறது
அயர்ந்த தூக்கத்தில் ! அழகி உன் முக தரிசிக்க
ஆவலாய் கூட இருக்கலாம் !

அலைபேசியின் குறுஞ்செய்தி ஒலியும் !
அலைபேசியின் அழைப்பின் ஒலியும் !
இதயத்தை இனம்புரியா இன்பத்தில் ஆழ்த்தி
விடுகிறது ! நிச்சமாய் அவள்தான் அவள்தான் என்று !

காத்திருத்தலில் உன்னிடம் என்ன பேச ! ஏது பேச
எப்படி பேச ! எனக்கு நானே ஒத்திகை பார்ப்பது உண்டு !
நீ வந்தவுடன் மொத்தமாய் உளறுவதும் உண்டு ! என்
உளறலை கூட நீ ரசிப்பதும் உண்டு !

எழுதியவர் : முபா (25-Aug-17, 6:55 pm)
பார்வை : 135

மேலே