விழிகள்
விழிகளின் விளையாட்டில்
*********************************************************************
உன் விழிகள்
என் விழிகளை
ஏன் உறங்காமல்
விழித்துக் கிடக்கச்
சொல்கின்றன
என் விழிகள்
உன் விழிகள்
வரும் வழிகள்
ஏன் பார்த்தே
துடிக்கின்றன
என் விழிகள்
உன் விழிகளுக்குள்
ஏன் ஒளிந்துகொள்ள
நினைக்கின்றன
என் விழிகள்
உன் விழிகளை
ஏன் உனைக் கண்டதும்
துடிப்பதை தான்
நிறுத்தி விட்டு
படபடக்கின்றன
என் விழிகள்
உன் விழிகளை மட்டும்
ஏன் தேடுகின்றன
என் விழிகள்
உன் விழிகளை
காணாவிடில் மட்டும்
ஏன் வாடுகின்றன
என் விழிகள்
உன் விழிகளை மட்டும்
ஏன் பார்ப்பதைவிட்டு
படிக்கத் தொடங்குகின்றன
என் விழிகள்
உன் விழிகளை மட்டும்
ரசிப்பதோடு நிறுத்தாமல்
ஏன் ருசிக்க நினைக்கும்
விசித்திரங்கள்
உன் விழிகள்
என் உதடுகளை ஊமையாக்கி
என் விழிகளை மட்டும்
ஏன் பேசச் செய்கின்றன
என் விழிகளும்
உன் விழிகளும்
இதயங்களின் வாத்தியத்தில்
பலர் போகும் சாலையில்
யார் அனுமதியும் பெறாமல்
எவர் அட்சதையும் இல்லாமல்
மாலை மாற்றிக்கொள்கின்றன
ஒவ்வொரு சந்திப்பிலும்
இரு விழி சந்திப்பில்
இரு மனம் சேரும்
இதய ஸ்வரத்தில்
ஒரு சுயம் வரம்
வார்த்தைகள் தேவைப்படாத
சில இதயங்களுக்கு
இது இறைவனின்
ஒரு வரம்
இரு விழி