அழகு காதல்

வார்த்தைக்கு எட்டாத
என் எண்ணங்களும்
வர்ணனைகளோடு
கவிதை எழுதுகிறேன்
கண்களுக்கு புலப்படாத காட்சிகளும்
ஓவியங்களாய் மின்னுகின்றன
என் கைவிரல் வித்தைகளால்
காகிதங்களில்...
என் நெஞ்சில்
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் ஆசைகள்
தவழ்ந்தோடி விளையாடுகின்றன..
தேனூறும் உன் உதட்டின்
மென்மையான கடிப்பில்
என் ஆண்மையும்
பொட்டிப் பாம்பாய் அடங்குகின்றன..
உன்னுடைய ஒவ்வொரு
கள்ளச்சிரிப்பிலும் கள்வனாயினேன்
நீ! ஒவ்வொரு முறையும்
வெட்கப் படும் போதும்
என் இரசிப்புத்தன்மை
கூடிக்கொண்டே போகிறது..
நான் தவறு செய்யும் போது
நீ! மிஞ்சி பேசும் அழகும்
நான் கெஞ்சி பேசும் போது
நீ! கொஞ்சி பேசும் அழகும்
நான் மிஞ்சி பேசும் போது
நீ! கெஞ்சி பேசும் அழகும்
அழகோ!! அழகு..
நீயும் அழகு.உன்னால் நானும் அழகு

எழுதியவர் : சக்திவேல் (28-Aug-17, 4:22 pm)
Tanglish : alagu kaadhal
பார்வை : 82

மேலே