மெளனம் ஒரு சப்தம்
இன்றுபோல் என்றும் இல்லாமல்
தொன்றுதொட்டு பழகி வந்த
எந்தன் ஏக்கங்கள் நின்றுவிடுமோ?
காயங்கள் ஆறாவிடில்
காலங்கள் கசந்தே போகும்,
நியாங்கள் கூடிவந்தாலும்
பலச் சாயங்கள் அதனை மறைத்திடும்,
பதில் கூறுங்கள் என்றே சொல்லி
யார் இங்கு வந்தாலும்
கேள்விகள் மட்டும் தான் எழும்,
ஒரே பதில் வைத்திருக்கும் என்னிடம்
யார் தான் கேள்விகேட்க முடியும்,
பதிலோ மௌனம்......
இது பல அர்த்தங்களை உண்டாக்கும் சப்தம்
பல கயங்களுக்கு – இந்த
அர்த்தசப்தமகிய மௌனமே மருந்து.