அழகு

அன்பும் அரவணைப்பும் பாசத்துக்கு அழகு
அறிவும் ஆற்றலும் ஆசானுக்கு அழகு

இரவும் பகலும் நாளுக்கு அழகு
இன்பமும் துன்பமும் வாழ்க்கைக்கு அழகு

உணவும் உடையும் உயிருக்கு அழகு
உயிரும் உடலும் ஆயுளுக்கு அழகு

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் சூழ்நிலைக்கு அழகு
என்னும் எழுத்தும் ஏட்டுக்கு அழகு

நீரும் நெருப்பும் பஞ்ச பூதத்துக்கு அழகு
நீயும் நானும் காதலுக்கு அழகு

............

எழுதியவர் : (29-Aug-17, 1:58 pm)
Tanglish : alagu
பார்வை : 117

மேலே