என் மகள்

.......என் கண்மணியே.......

சிறகுகள் முளைக்காத
என் குட்டி தேவதையே !

பத்து திங்கள்
நான் அனுபவித்த
வேதனைகளை
ஒரு நொடியில்
பறக்கச் செய்தவளே,
என் கருப்பை
புனிதமானதடி
உன்னை ஈன்றதினால்.....

மழலை மொழி
பேசும் பிள்ளையே,
தமிழைவிட
தொன்மையானதடி
உந்தன் மொழி,
அது
உனக்கும் எனக்குமே
புரிந்த மொழி......

உன் ஒரு பொன் சிரிப்பு
போதுமடி
கனத்து போன இதயம்
கரைந்து போக....

உன் ஒரு
பிடிவாத அழுகை
போதுமடி
என் பிடிவாதத்தை
தோற்கடிக்க..

மீளா துயர் என்று
நான் நினைத்திருந்த
விஷயங்களி்ல் இருந்து
என்னை மீட்டெடுக்க
வந்தவளே!
நீ தவழ்ந்து விழுந்து
அழுது மீண்டும்
தவழ்ந்து
உணர்த்தினாய்
விடாது முயற்சித்தால்
வெற்றி கிட்டும்
என்பதை......

இனி நம் வீட்டில்
உந்தன் கொலுசொலி
இன்னிசையாய்
இசைக்கட்டும,
உன் வளையோசை
வண்டுகளின்
ரீங்கரமாய்
ஒலிக்கட்டும்....

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (29-Aug-17, 4:56 pm)
Tanglish : en magal
பார்வை : 1045

மேலே