கல்வியறை கார்கில்
ஈராறாண்டு இருபால் குழவி
ஈர்ப்பால் எழுதிய
விழிப்போர் விதியாம்
ஆதாம் ஏவாள் பேசிய மொழியாம்
ஆயிரம் மொழிகள்
அழிந்தும் பிறந்தும்
மாறா மரபணு
மறவா மொழியாம்
அம்மொழியாம்
விழிகள் வழி வடியும்
மங்கை முன்மொழியும்
மௌனம் என்மொழியாம்
பரணி வென்றவனும்
பரம்பொரு ளென்றவனும்
பாவை முன்னின்று
மனமொழி மொழிவாயென்றால்
மௌனமே வழியென்பான் -நானும் அவ்வழியே அவள் நாணமும் அவ்வழியே
கல்வியறை கார்கில்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கவியரங்கம் அவள் கண்கள் என்றிருந்தேன் என்றிருந்தேன் -அதில்
விழிகள் கவிபாடும்
தவித்த என் மனமோ
தனிமை எனும்போது
கண்ணீர்த் ததும்பும்
இரங்கற்பா
தனக்கே தினம்பாடும்
அன்பில் சீரிய உள்ளம்
தேறிய நெஞ்சம் -ஒன்றாய்
சேரினும் அன்பே -காமம்,
கலவா பண்பும்
மாசிலா மனமும்
பேசிடும் மொழியே -என்
தமிழ் தேசியக்காதல்
என் மனமோ
மலரா மதுரக்குடுவை -அதில் அதிமதுரம்அவள்நினைவு
ஆழ்மனதில்என் காதல்
தினம் மலரும் முதற்புதினம்
-கல்லறை செல்வன்