உன் ஒற்றை ரோஜாவை போல்
சூரியகாந்தியை போல்தான்
முகம் மலர்ந்து விடுகிறேன் !
உன் சுள்ளென்ற பார்வையில் !
வெண்தாமரையைப்போல் தான்
வெட்கி சற்றே குனிந்து கொள்கிறேன் !
மல்லிகைபோலதான் மொட்டவிழ்ந்து
விடுகிறேன் !
என்றுமே உனக்கு பிடித்த
உன் ஒற்றை "ரோஜாவை "போல்
தான் இருக்க பிடித்து இருக்கிறது
எனக்கு !