செல்லக்கோவம் உன்னிடம்
இப்பொழுது என்ன செய்துகொண்டிருப்பான்
எங்கே இருப்பான் !
என்னைப்பற்றி நினைப்பானா !
என்னைக்காண ஆவல் இருக்குமா !
என் இதயத்தின் இடைவிடா கேள்விகளுக்கு
பதில் யார் உரைப்பார் !
உன் நினைவு சக்கரத்தில் என்னை
சுழல விடுகிறாயே !
எப்படி ! என்ன சொல்லி உன்னிடம் பேச !
காரணங்களை ஒவ்வொன்றாய் எனக்கு நானே
கேட்டுக்கொண்டேன் !
அலைபேசியில் ஒற்றை குறுஞ்செய்தி
உன்னிடம் இருந்து !
ஹாய் ! ரோஜா என்ன பண்ற ! பேசலாமா என்று
"செல்லக்கோவம்
உன்னிடம் காட்டாமல் இருக்க
முடியவில்லை "