தண்ணீரைக் காத்திட

நீர்
உயிர் இயக்கத்தின் ஆதாரம்
நிலத்தின் அடியிலும்
கிடைக்கும் மூலாதாரம்.

நன்னீரைத் தொலைத்து
கண்ணீரில் கரையும்
மாந்த இனம்.

இயற்கையின் போக்கை மாற்றி
இரண்டகம் செய்யும் மனிதர்
வன்முறை

வெள்ளமும் வறட்சியும்
விரட்டிடும் தேசம்
இந்தியா

நீருக்காய் போர்
நீண்ட நாட்களில்லை
விரைவில்

தண்ணீரைக் காத்திட
தேசம் கடந்து
கை கோர்ப்போம்

எழுதியவர் : மு.பாலசுப்பிரமணியன் (30-Aug-17, 3:24 pm)
பார்வை : 8931

மேலே