பெண் குழந்தை

ஏய் மாலதி எப்படிடீ இருக்க பார்த்து எவ்வளவு நாளாச்சு,
சாரிடீ உன் கல்யாணத்துக்கு வரமுடியல..
இது எத்துணையாவது மாசம்,ஒன்பதாவது மாசமா டாக்டர் செக்கப்லாம் போறீயா..
உடம்பை நல்லா பார்த்துக்கோ.
உன் ஆத்துக்காரர் எங்கே வெளிநாட்டுலயா இருக்காரு,இந்த நேரத்துல உன் கூட இருந்து நல்லபடியா பாத்துகனும்னு தெரியாதா,.சரி அதை விடு,
அப்புறம் உன் அத்தைலாம் எப்படி டைப், நல்லா பாத்துகிறாங்களா.
எனக்கு மூனு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கா..நான் குழந்தை பெத்துகிட்டப்போ என் அத்தை பெண் குழந்தை பிறந்துருச்சுன்னு சொல்லி பார்க்கவே வரலை. அவுகளுக்கு ஆண் குழந்தைதான் வேணும்னு பகவான்கிட்ட வேண்டிகிட்டு இருந்தா போல.அதான் பெண் குழந்தை பிறந்ததும் அப்செட் ஆகிட்டாள்..
இப்போ பரவாயில்லை பேத்தியோட ஒட்டிக்கிட்டாங்க.
அதான் உன் அத்தை எப்படினு கேட்டேன்.
அரசல் புரசலாக கேள்விபட்டேன் உன் அத்தை கூட அப்படித்தான் போல என்று காயத்ரி சொன்னதும் லேசாக அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது மாலதிக்கு..

அவளுக்கும் தெரியும் அப்பப்போ ஜாடை மாடையாக மாமியார் பேசுவது,என்ன பன்னுறது அவளுக்கும் அவ கணவருக்கும் எந்த குழந்தைனாலும் பரவாயில்லை,நல்லபடியா சுகபிரசவம் ஆன போதும் என்ற மனநிலையில்தான் இருந்தனர்...
சில நாட்கள் கழித்து பிரசவ வலி எடுத்தது.எல்லோரும் ஆஸ்பத்திரியில் கூடி இருந்தனர்..
குழந்தை பிறந்து உள்ளேயிருந்து அழுகை சப்தம் கேட்டதும்,
செவிலியர் வந்து அந்த மகாலட்சுமியே பிறந்து இருகாங்க என்று சொல்லியவாறு வெளியே வந்தாள்.
எல்லோரும் உள்ளே சென்று பார்த்து பேசி கொண்டிருந்தனர்..
அவளின் மாமியார் மட்டும் வெளியே கடுகடுப்புடன் நின்று கொண்டிருந்தார்.

மாலதிக்கு லேசாய் மயக்கம் தெளிந்து குழந்தையை தொட்டு பார்த்தும் உடல் சிலிர்த்தது..
இங்க பாருமா அதே கண்ணு,அதே மூக்கு அதே முகம் என் மாமியாரே மீண்டும் பிறந்தது மாதிரி இருக்கு.அவங்க காலத்துக்கு பிறகு அவங்க பேரு சொல்லுற மாதிரி வந்து பிறந்திருக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றாள் மாலதி.
வெளியே நின்று கேட்டு கொண்டிருந்த மாமியாரின் முகம் கடுகடுபிலிருந்து புன்னகைக்கு மாற தொடங்கிது.
கதவை திறந்து உள்ளே வந்து குழந்தையை தூக்கி கையில் வைத்து கொண்டு,
குட்டிமா நான் பாட்டி வந்திருக்கேன் பாரு,எங்க சிரி பார்ப்போம்.என் பேத்தி அப்படியே என் மருமக மாதிரியே எவ்வளவு அழகா இருக்கா என சொல்லவும் மருத்துவமணையே மகிழ்சியில் திளைத்தது.

பெண்கள் சூழ் உலகு ..
பெண் குழந்தைகள் இறைவனின் அருட்கொடை.

எழுதியவர் : சையது சேக் (30-Aug-17, 3:48 pm)
Tanglish : pen kuzhanthai
பார்வை : 377

மேலே