உலகின் ஒப்பற்ற ஓவியமாய்

என் கவிதை பூங்காவனமே !
காதல் ஓவியமே !

கன்னி உந்தன் கடைக்கண்
பார்வைக்குத்தானடி !
கால்கடுக்க காத்திருக்கிறேன்
காலைநேர மலரும் "ரோஜா"
உன்னைக்காண !

கடந்து போகும் கணப்பொழுதில்
கயல் விழிப்பார்வையால்
கச்சிதமாய் இதயத்தில் தைத்துவிட்டு
போகிறாய் பார்வை அம்பு ஒன்றை !

செம்பருத்தி பூவின் வண்ண நிறத்தழகே !
தீம் தமிழ் சுவையின் பேச்சு அழகே !

திரும்பும் திசையெல்லாம் நின் திருமுகமே
என் விழியிரண்டும் யாசிக்குதடி !
உன்னைமட்டும் ஏனடி இப்படி என் இதயம் நித்தம்
யோசிக்குதடி !

கொடி ஒன்றில் இரட்டை கொய்யாக்கனி மட்டும்
காய்த்து நிற்கும் புதுவகை செடி வகையா !
இரட்டை கலசங்கள் மட்டுமே தாங்கி நிற்கும்
புதுவகை கோபுர வகையா !

பித்தம் என்பது சுத்தமாய் இல்லையடி
சித்தம் முழுதும் இப்படி பித்தமாய் கூடிப்போய்
பித்தனாய் ஆகிறேண்டி உன் பின்னே வந்து
பின்னழகில் சொக்கிப்போய் !

எத்தனை கவிதைதான் எழுதுவது உன்னழகை
வர்ணித்து ! நீ வற்றாத நதியா ! என் காலம் முழுதும்
கிடப்பேனடி உன் மடி சாய்ந்து கதியாய் !

பார்த்த அழகெல்லாம் படிப்படியாய் எழுதிவிட்டேன்
கவிதையாய் !
பார்க்கா அழகெல்லாம் பார்த்துவிட்டால் எழுதலாம் போல
ஒரு மிகப்பெரிய காவியமாய் !

நீயே எனக்குள் என்றும் வாழ்கிறாய் உலகின்
ஒப்பற்ற ஓவியமாய் !

என் கவிதைகளை வாசித்துக்கொண்டே வாழலாம்
என்னோடு என்றும் பேரின்பமாய் !

எழுதியவர் : முபா (30-Aug-17, 5:20 pm)
பார்வை : 841

மேலே