இந்தியாவின் இளைஞர்கள்

'இளைஞனே
பருவ நெருப்பில்
காய்ச்சிய வாளே!
நாளை என்பது
உன் திருநாளே
நினைவிருக்கட்டும்
உன்
புருவ நெருப்பில்
பூகம்பங்கள்
இமையைத் திறந்தால்
சூர்யோதயங்கள் ...'

'நீ
தலை நிமிர்ந்து நடந்தால்
நீல வானம் குடைபிடிக்கும்
தாழ்ந்து இழிந்து குனிந்தால்
கைக்குட்டையும் எட்டாத
வானமாகும்'

'வா
நீ வெல்ல
விண்வெளி காத்திருக்கிறது
நீ பந்தாட
கிரகங்கள் காத்திருக்கின்றன
புழுதிகளையும்
பிரளயமாக்க
விழி திற!
வெற்றி உனக்குமுன்
கொடியெடுத்துப் போகிறது
வருக இளைஞனே! வருக'

'சந்தனம் மணத்தைச்
சந்தைகளில் தேடுவதில்லை
தென்றல் குளிர்ச்சியைத்
தெருக்களில் பெறுவதில்லை
உன் வாழ்வை
உன்னைத் தவிர்த்து
வேறெங்கு தேடுகிறாய்'

'கடமை வாக்கியத்தில்
வார்த்தைகளாய்
இருப்பவர் மட்டுமே
உரிமை உதடுகளால்
உச்சரிக்கப்படுவார்கள்'

'உன் கிழக்கில் கூட
அஸ்தமனம் தான்
விதைக்க மறந்தவனே
உனக்கேன் அறுவடை ஞாபகம்'

'இந்திய இளைஞனே
இந்திய இளைஞியே
காந்தி நேரு
அப்துல்கலாம் அடிகளார்
அருகா டேவீஸ் அருணா ஆசப்
இந்திரா சரோஜினி
இவர்களையெல்லாம்
நெஞ்சில் பச்சைக்குத்தி
நிறுத்துங்கள்'


'உன்னுள் கடல்
கடலுள் நீ.
இந்தப் பெருமிதத்தோடு
எழுந்து நில்
உன் உச்சிக்கான
ஏணி கேட்டு
நாணிக் குனியும'

'இன்றைய
இளைஞர்கள்
இடி மின்னலையும்
காலடியில் வைப்பார்கள்'

எழுதியவர் : (30-Aug-17, 5:16 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2459

மேலே