காதல் கிறுக்கனடி
காதல் கிறுக்கனடி
உன் மீதுள்ள காதலால்
கிறுக்கனானேனடி...
உன் உச்சியின்
வகுடிற்குள்
என் உயிர்
உன்னுள் இறங்குமடி..
உன் பின்னல்
வளைவுகளில்
என் அறிவு
வளையுதடி...
உன் பிறை நெற்றியின்
பொட்டிற்குள்ளே
என் ஆயுள் முழுதும்
அடங்குமடி..
நீ பார்க்கும்
ஒரு பார்வைக்கு
என் மொத்த
உடலும் தவம்
இருக்குமடி...
உன் சிரிப்பு போதும்
என்னை முழுவதுமாய்
சாய்த்திட.....
பாறாங்கல்லாய்
கனக்கும் இதயமும்
உன் துப்பட்டா
உரசினால்
லேசாகி போகுமடி.....
கடிவாளம் போட்ட
குதிரையாய்
என் உயிர்
உன்னை மட்டும்
நினைக்குதடி...
பத்தியம் இருந்த
என் மனசு
உன்னை பார்த்ததும்
பைத்தியமாய்
திரியுதடி...
நீ நடந்து போனால்
மரத்திற்கு பதிலாக
நான் நின்று
நிழலாய் மாறுவேனடி...
மழையும் வெயிலும்
உன்ன அண்டாமல்
அய்யனாராய்
காத்து நிற்பேனடி...
உந்தன் கொலுசு சத்தத்தில்
என் இதயம்
வேகமாய் துடிக்குதடி.....
உன் வழியும்
என் வழியும்
ஒரு வழியாகிட,
வலிகள் இல்லா
வாழ்க்கையை
வாழ்ந்திட
உன்னை அழைக்கிறேனடி..
என் காதல் பூவே,
நம் கைகள்
சேர வேண்டுமடி..
என் கை ரேகை
அழிந்தாலும்
உன்னை கை விட
மாட்டேனடி....