ஒரு தலை காதல் பயணம்

நீ வரும் திசை பார்த்து
சட்டைய்பையில் மடலோடும்
கரங்களில் மலரோடும்
நெஞ்சுகுளியில் சிறு பயத்தோடும்
பாதையோரம் ஒதுங்கி
நீ வரும் வரை நான் காத்திருப்பேன்

கண்டும் காணமல் நீ செல்வாய்
இறந்தும் இறவாமல் நான் இறப்பேன்
உன்னை என் உயிராக நினைத்து
பல வருடங்களாக
உன் பின்னால் சுத்தியதட்க்கு
கூலியாக இன்று
உன் வாய் எச்சில்தான்
எனக்கு மிச்சமானது

உலகில் உன் வீட்டு பாதை மட்டுமே
எனக்கு பூவனமாக தெரிந்தது
உன் பெயர் ஒன்றே
என் வாய்களில் வார்த்தையானது
உன் நினவு ஒன்றே என் இதயத்தில் மூச்சானது

நீ நடக்கும் சத்தத்தில் வரு ஓசையே
என் காதுகளுக்கு சங்கீதமானது
இன்று அவை அனைத்தும் சேர்ந்தே
என் கண்களில் கண்ணீராகிறது

உனக்காக நான் எழுதி வைத்த மடல்களும்
பிடித்து நின்ற மலர்களும் இன்று
என்னோடு சேர்ந்து கண்ணீர் வடிக்கிறது
என்னை ஏற்றுகொள்ள மறுத்த
உன்னை நினைத்து
நிலவின் கண்ணீர் துளிகள்
அனைத்தும் காலையில் புட்களில்
பனித்துளியாக கிடக்கிறது

உன் நினைவால் வரும்
கண்ணீர் துளி அனைத்தும் தினம்தோறும்
என் இதயத்தை அக்கினி துளியாக எரிக்கிறது .....

உன்னாலே பல அவமானம் பட
துணிந்துவிட்டது என் மனம்
ஆனாலும் உன்னை மறக்கத்தான்
ஒரு துளியும் துணிவு இல்லை
எவ்வளவுதான் நீ என்னை வஞ்சித்த போதும்
என் இதயம் உன்னை
மிஞ்சி பேச நினைத்ததே இல்லை

பல அவமானங்கள் தாங்கி பல வலிகல் சுமந்து
மறுபடியும் என் சட்டைப்பையில் மடலை ஏந்தி
என் கரங்களில் மலரை ஏந்தி நீ தினம் தோறும் வரும்
அந்த ஒற்றையடி பாதையில்
எனது ஒரு தலை காதல் பயணம்
மறுபடியும் தொடர்கிறது ........

எழுதியவர் : முகமட் அஸ்மி (30-Aug-17, 4:09 pm)
பார்வை : 205

மேலே