இன்றைய இளைஞர்கள்

சோற்றுக்கே வழி இல்லை
சோனி எரிக்சனோடு போராட்டம்!
ஏறுபிடிக்கும் கலாச்சாரம் மறந்து
ஏர்செல்லோடு திண்டாடிக் கொண்டிருந்தாயே!
நோக்கத்தை மறந்து விட்டு
நோக்கியாவோடு என்னய்யா பேச்சு
எதிர்காலம் புதைந்து கொண்டிருக்கிறது
நீ சாம்சங்கோடு இசைமழையில் நனைந்து
கொண்டுருக்கிறாயா!
நம் முன்னோர்கள் போராட்டத்தின் வாரிசுகள்
இன்றைய இளைஞர்கள் வோடோபோனின்
இரசிகர்கள்!

எழுதியவர் : சந்தோஷ்ராஜ் (30-Aug-17, 5:21 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 3056

மேலே