வெள்ளை புறா
சமாதானத்திற்காக ஏவிவிட்டால்
சதிகளின் வழியே பறக்கிறாயே
சாட்சிக்காக வானத்தை வைத்து
சத்தியமாக நீ இருந்து
சாகாமல் வாழுமுன்னே
சட்டென்று சேர்ந்துவிடுவாயே
சதிகளை கடந்து விடுவாயே
நித்திலமாய் நீயிருந்து
நிம்மதி கிடைப்பதற்கு
நீங்காது தந்திடுவாயே
நிலைபெறட்டும் நன்னம்பிக்கை.