எப்படி வெளிப்படுத்துவேன் என் பேரன்பை
இப்போதெல்லாம் என்னை பற்றி கவிதை எழுதுவதே இல்லையென,
முகம் திருப்பி அலுத்து கொண்டு,
என்னை தவிர வேற யாரையும் உன்னால் நினைச்சுகூட பார்க்க முடியாது,
என பெருமையும் கொள்கிறாள்.
எனக்கு ஐ லவ் யூ சொல்லி இன்றோடு,
இத்தனை நாளாயிற்று என்று கணக்கிட்டு வைத்து கொண்டு,
இன்று கண்டிபாய் என் ஒரு ஐ லைவ் யூ க்கு பகரமாய்,
நூறுமுறை சொல் என்று சண்டையும் இட்டுக்கொள்கிறாள்..
இன்று இன்ன இன்னது சாப்பிட்டேன் என்று,
உணவு பட்டியலை வாசித்து விட்டு,
உன் கைகளால் எப்போது சாப்பிடுவேனோ என்று
தீராத ஏக்கமும் கொள்கிறாள்..
எனக்கு இதுவெல்லாம் வேண்டும்,
இதுவெல்லாம் பன்னனும் என கட்டளை பிறப்பித்து விட்டு,
எல்லாம் உங்க புள்ளைதான் கேக்க சொல்லுச்சு என்று,
எளிதில் என்னை மிரட்டி பணிய வைக்கிறாள்..
இதற்கு பதிலாய் எப்படி வெளிப்படுத்துவேன் என் பேரன்பை,
உன்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதை தவிர.