நிறுத்திவிடு அன்பே
நிறுத்திவிடு அன்பே
உன் காதல் விவசாயத்தை
நீ கை வீசிய திசையெங்கும்
காதல்விதை சிதறுகிறது
நின் அழகில் இளமனங்கள்
காதல் கனியாகிறது
உன் பார்வையில் இதயங்கள்
அறுவடையாகிறது
நின்தரிசனம் காணாமல் மன
வயல்கள் தரிசாகும் முன்
நிறுத்திவிடு அன்பே
உன் காதல் விவசாயத்தை...