சும்மா ஒரு பாட்டு
ஆண்: தேர போல போகும்புள்ள
ஓர பார்வை தீரவில்லை
மாமன் வரேன் காதல் பன்ன
தேனும் பாலும் சேர்ந்த புள்ள .
செம்மண் பாதையில் பூத்த முல்லை
நான் தொட்டா பின்னே மொட்டாகுது.
கம்மாங் கரையில் நான் கால் நனைக்க
எழுந்து நிலவு நனைத்து போகுது.
பெண்: முரட்டு காளை மாமா பையா
அடங்கி போனேன் உன் பார்வை மெய்யா.
நானும் வாரேன் காதல் பன்ன
நாணம் வந்து போன பின்னே .
முல்லை காட்டு வேட்டைக்கார
உந்தன்வலையில் காதல் புறா.
கண்ணிவைக்க தேவையில்லை
காத்திருக்கேன் பூத்த முல்லை .
ஆண்: மாலை நேர மேகச்சாரல்
தூர நின்று சிரிக்கும் போது.
அருகில் வந்து,அருகில் வந்து,
அருவியாக மேனியில் வீழ்ந்திடு.
பெண் :நாணம் விட்டு போகும்போது,
தேகம் சுட்டு நோகுது.
பாதம் மெல்ல,பாதம் மெல்ல,
பாதை தேடி ஓடமாகுது.
ஆண்:இடுப்பில் கொஞ்சம் எனை இறுக்கி கட்டு
தளர்ந்து போகும் நெஞ்சம் எனக்கு.
பெண்:தோளில் என்னை ஏற்றிக்கொள்ளு
தேகம் அடங்கி போகும் உனக்கு.