இதயத்தின் இராட்சசி

கறுமை மாறா காடுகளில் மல்லிகை சரங்கள் பூத்து கிடக்க,
ஒத்தயடி பாதையின் முகப்பில்,
பௌர்ணமி நிலவொன்று பிரகாசிப்பதை எங்ஙனம் சொல்வேன்..

அழகின் நகல் இவளோ
ஆழியில் மூழ்கிய முத்திவளோ..
தேவதையின் மறுபிம்பமோ
தெய்வத்தின் கடைசி படைப்பினமோ.
அவளே எந்தன் உயிரோ
உயிரின் உயிரை சுமப்பவளோ,
தீராத பேரன்பில் கலந்தவளோ,
அவள் அவள்தானோ.
என்னில் தன்னை புதைத்தவளோ,
எண்ணில்லா காதலின் அதிபதியோ.
என்னவளோ,
என்னில் எந்நாளும் சங்கமித்து துயில்பவளோ,
மெய்யில் மெய்யாய் கலந்தவளோ,
அன்பை அமிர்தமாக்கி கொல்லும் ராட்சசியோ,
நேசம் கொண்டு வாழும் ரோசக்காரியோ,
பொய்கோபம் கொள்ளும் வேஷக்காரியோ
செல்ல சண்டை போடும் பாசக்காரியோ,

நீ யாரென்று சொல்லவா
நீயே எந்தன் உயிர் அல்லவா.

எழுதியவர் : சையது சேக் (31-Aug-17, 12:53 pm)
பார்வை : 159

மேலே