இதயத்தில் செல்லமாய் வலிக்குதுடி

அடி ! போடி !
கிறுக்கி
கள்ளி !
குட்டச்சி !
குரங்கு !

சும்மா சுட்டு விரல் காட்டி
கொன்னுடுவேன்னு மிரட்டுனா
பயந்திடுவேனா !

சரி !
சரி !

குறு குறுவென்று
குத்தீட்டி விழிகளால் அப்படி
பார்க்காதே !

குத்தூசி வைத்து இதயத்தில்
குத்துவதைப்போல
"இதயத்தில் " செல்லமாய்
வலிக்குதுடி !

எழுதியவர் : முபா (31-Aug-17, 12:09 pm)
பார்வை : 652

மேலே