நினைவுகள் போதுமடி உன்னைக் காணாமல் இருந்திருக்கலாம்-7
என்னைப் புதைக்கையில் என்னை
மூடும் மண்ணாக நீயே வேண்டும்
சேர்ந்தே கரையான்களின் பிடியில்
தான் கரைந்திட வேண்டும்
என்னை எரிக்கையில் என்னோடு
எரியும் விறகுகளாக நீயே வேண்டும்
சேர்ந்தே சாம்பலாய் கடலில்
தான் கலந்திட வேண்டும்
நான் இறக்கையில் என்னுடைய
இறுதி துடிப்பாக நீயே வேண்டும்
எடுத்தே செல்வேன் என்னில்
உன் நினைவுகொண்ட இறுதிஇசையை
நான் பறக்கையில் ஆவிக்கு
உரிய தேவியாக நீயே வேண்டும்
கூட்டியே செல்வேன் உன்னை
என் இறுதி துணையாய்
உடன்கட்டை ஏறச் சொல்லவில்லையடி உன்னை
உடனிருக்கும் உன் நினைவுகள் போதுமடி எனக்கு ....!