குடைக்குள் காதல்
காலை வேளையில் அழகிய மழை பொழிகிறது ,,,,
குடைக்குள் தான் இருக்கிறேன்,,,,
இருந்தும் ஏனோ நனைகிறேன் !
காதல் மழையில் ..,
நனைந்த என்னை
துடைக்க முயல்கிறேன்
உன் துப்படாவில்,,,
அதற்குள் காய்ச்சி விட்டது உன் விழிகளின் தீண்டல் ..
விழிகளின் மோதல் முடிந்த பிறகு,
ஓய்வு எடுக்க நினைக்கையில் ,,,
வீசுகிறது ஒரு புன்னகை பூங்காற்று,,
போதும் அடி பெண்ணே,
திணறுகிறேன் உன் அருகில்
மூச்சு விட முடியாமல்,,,
கொலைகாரி ஆகி விடாதே
உயிர் வாழ ஆசை படுகிறேன்,,,
உன்னுடன் ....