தூமகேது The Comet

சூரிய கிரகணம் நாம் அழைக்காமலே அழையா விருந்தாளியாக இரண்டரை நிமடங்கள் அமெரிக்கர்களை வந்து ஆகஸ்ட்2017 இல் தரிசித்துப் போய் விட்டது. வின்கல் மழை தங்கள் சொரிவைக் அடிக்கடி காட்டிப் போகும். வால் நடசத்திரம் என்ற தூமகேது தன் நீண்ட வாலின் அழகைக் காட்டி சில மாதங்களில் மறைந்துவிடும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள குடும்பங்களில் அன்றாடம் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு, காதும் மூக்கும் வைத்து, பல கற்பனைக் கதைகள் வேதத்தில் உருவாகி இருக்கிறது. அதை உண்மை என்று நம்பியவர்கள் பலர். ஹாலியின் வின்மீன் (Haley’s Comet) என்ற தூமகேது, சுமார் 76 ஆண்டுக்களுக்கு ஒரு தடவை வந்து தன் அழகை உலக வாசிகளுக்கு காட்டி மறையும். அப்படி 2013 இல் ஐஸ்சொன் (ISCON) என்ற தூமகேது வந்து போகும் போது நடந்த மூடநம்பிக்கை உள்ள ஒரு கிராமத்தின் கதை இது.

******

தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கத்தைப் பிறப்பிடமாக கொண்ட ஹரிகரன் (ஹரி) ஸ்கொலர்ஷிப் பெற்று, லண்டன் சென்று. வான் இயற்பியல் (Astro Physics) துறையில் பட்டம் பெற்றவர் லண்டனில் உள்ள குயீன் மேரீஸ் பல்கலை கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்பவர். அவர் முனைவர் பட்டம் பெறுவதற்கு தூமகேது என்ற வால் நட்சத்திரங்களின் தோற்றமும் வரலாறு பற்றியும், அதனால் பூமிக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர். பாலசுந்தரத்தோடு நண்பரானார். ஹரிகரன்- பாலசுந்தரம் நட்பு குயீன் மேரீஸ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டது.

பாலசுந்தரம் (பாலா), . ஈழத்து வன்னியில் உள்ள முல்லைத்தீவில் பிறந்தவர். வன்னியில் உள்ள ஓட்டுசுட்டானில் சில வருடங்கள் ’ வரலாறு ஆசிரியராக கடமையாற்றியவர். ஈழத்து போர் நிமித்தம் அவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து’ லண்டனுக்கு புலம் பெயர்ந்த பலரில் பாலாவும் ஒருவர். வன்னி மக்களின் கலாச்சாரம், வரலாறு பற்றி நன்கு அறிந்தவர். பாலாவும், ஹரிகரனும் திருமணமாகாதவர்கள்.

அன்று விடுமுறை. ஹரிகரன் தயாரித்த தோசை, இட்டலி, சாம்பார் உணவை சுவைக்க பலா .ஹரியின் வீட்டுக்கு அவர் அழைப்பில் போயிருந்தார்.. போசனத்துக்குப் பின்’ இருவரும் ஹாலில் இருந்து உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.

“ ஹரி, நான் இன்னும் ஒருமாதத்தில் என் ஊருக்கு பெற்றோரைப் பார்க்க போக இருக்கிறேன். உமக்கு வன்னியை ஆண்ட பண்டார வன்னியனை பற்றி’ ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவர் பிரிட்டிஷ் இராணுவத்தோடு போர் புரிந்த இடம் கற்சிலைமடு. அக்கிராமம் ஒட்டுசுட்டனில் இருந்து மேற்கே சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது . ஈழத்து வரலாறு பற்றி அறிய ஆவல் உள்ள நீர்’ என்னோடு ஒட்டுசுட்டானுக்கு வர விருப்பமா?. அந்த’ வரலாறு உள்ள கிராமத்துக்குப்’ போய்’ நாம் அந்தக் கிராரமத்தின் மக்களை சந்தித்தித்துப் பேசலாம். என் பாட்டனர் முத்தையா என்பவர் தொண்ணூறு வயதாகியும் பல் விழாமல் அங்கு வாழ்கிறார். அவரையும் சந்திக்கலாம். என்ன சொல்கிறீர்”?

“அது சரி பாலா,. நீர் வன்னி வரலாறு அறிந்தவராயிற்றே அந்த கிராமத்துக்கு அந்தப் பெயர் எப்ப்படி வந்தது?. சிலை ஏதும் உண்டா”

“ கற்சிலைமடுக் கிராமத்தில் 1803 ஆண்டில் மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு, குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது. இதுவரை காலமும் அந்தப் பகுதி மக்களால் புனிதமான சிலையாக பாதுகாக்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட நினைவுக்கல்லே வன்னியின் தொன்மையையும் பண்டாரவன்னியனின் சிறப்பையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்மான ஒரே ஒரு நினைவுக்கல்லாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தனியான சுண்ணக்கல்லால் ஆக்கப்பட்ட இந்த நினைவுக்கல் அமையப் பெற்றமையால்த்தான் அது அமைந்துள்ள கிராமம் கற்சிலைமடு என பெயர் பெற்றது.
“ அப்போ ஈழத்து போரில் சிலை தப்பி விட்டதா”?

“எங்கே தப்பியது?. தமிழர் வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதில் தாம் போர்துக்கேயருக்கு குறைந்தவர்கள் இல்லை என்று காட்டி விட்டது சிங்கள இராணுவம்.”.

“ இதுவே என்னை அந்த கிராமத்தைப் பார்க்க வேண்டும் போல் மேலும் என் ஆவலைத் தூண்டுக்கிறது. நான் ஈழம் சென்றதில்லை. வன்னியைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஈழத்து இறுதிப் போர் நடந்த நந்திக் கடலையும் அதன் அருகே உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலையும்’ பார்க்க வேண்டும் போல் இருக்குது. நானும் உம்மோடு ஓட்டுசுட்டானுக்கு’ வருகிறேன். அழைப்பிற்கு நன்றி’ பாலா”, ஹரிகரன் சொன்னார்
.
“அங்கு வரமுன் உமக்கு ஒரு எச்சரிக்கை. சில வன்னி கிராம வாசிகள் பழைய மூட நம்பிக்கையில் ஊறியவர்கள். அவர்களோடு பேசுவது கவனம்”

“பாலா,, உமக்கு அசௌகரியம் தராமல் நடப்பேன். அது உறுதி”

“ அது சரி ஹரி நீர் ஒரு பிராமணன். அதோடு வான் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஏன் வால் நட்சத்திரத்தை தூமகேது என்றும் அழைக்கிரார்கள்?. எதற்கு எதாவது காரணம் உண்டா”

“இராக் தேசத்தின் கெமிக்கல் அலி (Chemical Ali) என்பவரை பற்றி கேள்விபடிருப்பீரே. அவர் சதாம் ஹுசைனின் கட்டளைப் படி குர்திய மக்களின் கிளர்ச்சியை அடக்க இரசாயன ஆயுதம் பாவித்தார் என்பதற்காக தூக்கில் இடப்பட்டார். இரசாயனப் போர் முறை (Chemical warfare) பற்றி வேத காலத்து கதை ஓன்று உண்டு. விநாயகரின் 16 முக்கிய பெயர்களில் ஒன்று தூமகேது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு: ஓன்று .வால் நட்சத்திரம், இரண்டாவது .விநாயகப் பெருமான். அவருக்கும் வால் நட்சத்திரத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

விகுதி என்ற ஒரு அரசன் இந்திர பதவி மீது ஆசை கொண்டான். அதைப் பொறுக்காதோர் அவனைச் சபிக்கவே அவன் தூமாசுரன் என்ற புகை அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்று பொருள். அவனிடம் விஷப் புகை (Weapons of Mass Destruction) ஆயுதங்கள் இருந்தன. அதை அவன் ரிஷிகள் மீதும் நல்லோர் மீதும் பிரயோகித்தான். அவனைக் கொல்ல சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை உதவும் என்று ஒரு அசரீரி கேட்டது. ஆகவே சுமுதை கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கு விநாயகரே அவர்களுக்குக் குழந்தையாக வந்து அவரிடம் வளர்ந்தார்.

தூமாசுரன் செயல்களைப் பிள்ளையார் கேள்வி கேட்கவே. அவன் கோபம் கொண்டு அவர் மீது புகை ஆயுதங்களைப் பிரயோகித்தான். பிள்ளையார் அத்தனை புகையையும் உள்வாங்கி. தூமாசுரன் மீது அந்த விஷப் புகையைக் கக்கவே அவன் சேனைகளுடன் அழிந்தான். ஆகவே பிள்ளையாருக்கு தூமகேது என்று பெயர் வந்தது. அது தான் கதை. இந்தக் கதையை ஏன் பாலா கேட்டனீர்”

“கற்சிலை மடுவில் என தாத்தாவை சந்திக்கும் போது நான் கேட்ட
காரணம் அறிவீர் ஹரி”
*****
இரு நாள் பயணத்தின் பின் கொழும்பு ஊடாக ஒட்சுட்டானை இருவரும் வந்தடைந்தார்கள். வாடகை’ கார் ஒன்றை கொழும்பில் இருந்து பாலசுந்தரத்தின் நண்பன் ஒருவன் ஒழுங்கு செய்திருந்ததால் சுமார் 2௦௦ மைல் பயணத்தின் பின், முதலில் முல்லைதீவில் உள்ள பாலாவின் பெற்றோரிடம் இருவரும் ஆசி பெற்றனர். அதன் பின் நந்திக் கடல். வற்றாப்பளை அம்மன் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஒட்டுசுட்டானைப் போய் அடைந்தனர். போகும் வழியில் காடுகளை அழித்து,. எரித்து. சாம்பலை உரமாகக் கொண்டு சேனை விவசாயம் வன்னியில் செய்வதாக பாலா. ஹரிக்கு சொன்னார். தான ஒட்டுசுட்டானில் ஆசிரியராக தடமையாற்றிய பாடசலைக்குப் போன போது; தன்னோடு ஒன்றாகப் படிப்பித்த மகாதேவன் என்பவரை தலைமை ஆசிரியராக தான் காண்பேன் என்று பாலா எதிர்பார்கவில்லை;

ஒட்டுசுட்டனில் இருந்து ஏ34 பாதையில் மேற்கே 2 மைல் பயணத்தின் பின்; கற்சிலைமடு கிராமத்தை இருவரும் போய் சேர்ந்தனர். அக்கிராமத்தில் பண்டார வன்னியனினின் சிலைக்கு மரியாதை செலுத்தி, பாலாவின் பாட்டனர் முத்தையா வீடு போய் சேர்ந்தனார். அந்த வயதிலும் அவர் சுறு சுறுப்பாக தன் மனைவி நாச்சியாரோடு இயங்குவதைக் கண்டு ஹரி ஆச்சரியப்பட்டார். இந்த முதுமையிலும் அவர்கள் ஒற்றுமையைக் கண்டு வியந்தார்.

அன்று அக்கிராமத்து பிள்ளயாருக்கு பொங்கிப் படைத்தனர் கிரம வாசிகள். ஒரே கூட்டம். கிராமத்தில் மூத்தவர் என்பதால் முத்தையாவுக்கு அவ் விழாவில் பிரதம அதிதி என்ற மரியாதையை கிராமவாசிகள் கொடுத்தனர்.

“ தாத்தா இப்படி அடிக்கடி பிள்ளயாருக்கு இந்த ஊர் வாசிகள் பொங்கிப் படைப்பார்களா? ஹரி கேட்டார்

“ கிராமத்தில் 1986 இல் தெரிந்த வால் நட்சத்திரத்தால் ஆபத்து வராமல் இருக்க பண்டாரவன்னியன் ஆட்சி காலத்தில் தோன்றிய பிள்ளையாருக்கு பொங்கி படைத்தனர். இந்தப் பிள்ளையார் ஊர் வ வாசிகளை யானைகளின் தாக்’குதலில் இருந்தும் வால் நடச்திர்தின்
பாதிப்பில் இருந்தும் காப்பாற்றும் தெய்வம் என்ற மக்களின் நம்பிக்கையால் இந்த பொங்கல் விழா“ விளக்கம் கொடுத்தார் முத்தையா.

“ வால் நட்சத்திரம் 1986 இல் எப்படியான பாதிப்பை கிராமத்துக்கு கொடுத்தது தாத்தா” ஹரி கேட்டார்.

“ வால் நட்சத்திரம் வந்து போன பின், இராணுவத்தின் தாக்குதலினால் இந்தக் கிராமத்தைச் சுற்றி உள்ள காடுகள் தீ பற்றி எரிந்தன.. சில குடிசைகளும் எறிந்தன . சிலர் இறந்தனர். விவசாயப் பயிர்கள் நாசமாயிற்று.” : கவலையோடு சொன்னார் முத்தையா.

: அப்போ இந்த பொங்கல் எதற்கு”?

“இந்த பொங்கல் 2’013 இல் கார்த்திகையில் தோன்றவிருக்கும்’ மிகப் பெரிய வால் நடச்சதிரம் கக்க இருக்கும் விஷப் புகையில் இருந்து கிராமத்தைக் காப்பாற்றவே இந்தப் பொங்கல் பிள்ளையாருக்கு” என்றார முத்தையா,

.”’ இதை நீங்கள் நம்புகிறீர்களா தாத்தா?”

“ ஊரே நம்பும் போது நான் மட்டும் நம்பாமல் இருக்க முடியாது. இந்த ஊர் பூசாரியும். சாத்திரியும் அதைத் தான் சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே முந்தி நடந்திருக்கிறது” என்றார் உறுதியோடு தாத்தா.

“ ஹரி உமது ஆய்வின் படி எப்போது வால் நட்சத்திரம் தோன்றும்?

; வால் நட்சத்திரம் ஐஸ்சொன் (ISON) 2013 ஆண்டு நொவம்பரில் தெரியும். அதாவது. இன்னும் மூன்று மாதங்களில் பார்க்கலாம். அதன் கரு சூரியனை விட 12 மடங்கு பெரிது. வால் நட்சத்திரத்தின் கருவானது தூசி. வாயு, பனிக்கட்டிகலால் உருவாகியது. சூரியனின மையத்தில் இருந்து 1,860,000 கிமீ தூரத்தில் வரும்’ போது எம் கண்களுக்கு புலப்படும் 400,000 வருடங்களுக்கு ஒரு தடவை பூமிக்கு தெரியும். 14-15 ஜனவரி 2014 இல் ISON இன் சுற்றுப்பாதைக்கு அருகே பூமி கடந்து செல்லும போது, சூரியனின் கதிர்வீச்சால் வீசிய மைக்ரான்-அளவிலான தூசி துகள்கள் விண்கல் மழை அல்லது தூசிகள் நிறைந்த மேகங்களை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. வால் நட்சத்திரம் ISON இன் சுற்றுப்பாதைக்கு அருகே மட்டுமே வால் நட்சத்திரம் பூமியை கடந்து செல்லும் போது, வால் வழியாக, விண்கல் மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருக்கும். இதுவரை அது நடந்தாக பதிவாகவில்லை. சிறிய துகள்கள்களை சுற்றுப்புற பாதையில் விட்டுச்செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. -. இத்தகைய சூழ்நிலைகளில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் எதுவும் இல்லை. இந்த தூமகேதுவுக்கு இவர்கள் பயந்து பூஜை செய்கிறார்கள் பயப்படத் தேவையில்லை. இருந்தும் இந்தக் கிராம வாசிகள் எதிர்பார்க்கும் வால் நட்சத்திரத்தில் இருந்து நச்சு வாயுவோ அல்லது. நெருப்போ பூமியை தாக்காது.” என்று விளக்கம்’ கொடுத்தார் ஹரி. இரு கிழமை இலங்கை பயணத்தின்; பின்’ இருவரும் லண்டன்; திரும்பினர்.

*****
அன்று 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 12அம’ திகதி டிவி யில் இலங்கையில் வட மாகாணத்தில் உள்ள வன்னியில் ஏற்றப்பட்ட காட்டுத் தீ பற்றி டிவியில் காட்டியதைக் கண்டு பாலாவும் ஹரியும் அதிர்ச்சி அடைந்தனர்.

“கேட்டீரா ஹரி செய்தியை.. கிராமவாசிகள் பயந்தது போல் நடந்து விட்டது நல்ல காலம் கற்சிலைமடு கிராமத்தில் காட்டு தீ நடக்கவில்லை அவர்கள் கிரமத்தில் இருந்து. சுமார் மேற்கே 30 மைல் தூர்த்தில் உள்ள காட்டில் காய்ந்த மரங்களை மின்னல் தாக்கியதால் காட்டுத் தீ உருவாகி, சில கிராமங்களை அழித்து இருக்கிறது.. வால் நட்சத்திரம் தோற்றமும். காட்டுத் தீ உருவாகியதும்’ தூய தற்செயல். அது போதும் கிராமவாசிகளுக்கு. அவர்கள் பிள்ளயார் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை:” என்றார் பாலா.

“எல்லாமே இயற்கையின்’ செயல் பாலா” பதில் சொன்னார் ஹரி.

******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் – கனடா) (2-Sep-17, 7:00 am)
பார்வை : 368

மேலே