என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 6
"அம்மா, சாரி, கொஞ்சம் லேட் ஆயிருச்சு, "என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான் பிரவீன்.
"டேய், உன் கம்பெனி ல இருந்து லேண்ட் லைனுக்கு போன் வந்துச்சு. ஏதோ மெயிண்டனென்ஸ் வேலை போட்ருக்காங்களாம், அதனால சண்டே நீ டூட்டிக்கு போகணுமாம், பர்ஸ்ட் ஷிப்ட். உனக்கு போன் பண்ணிருக்காங்க, நாட் ரீச்சபிள் னு வந்துச்சாம்" என்றாள் பிரவீனின் தாய்.
"ஏம்மா அட்டென்ட் பண்ணின, ஆல்ரெடி எனக்கு தெரிஞ்சு தான் நான் அட்டென்ட் பண்ணல." முறுக்கிக்கொண்டான் பிரவீன்.
"டேய், எனக்கு எப்பிடிடா தெரியும், நீ சொன்னியா?" என்றாள் பிரவீனின் தாய் அமுதா.
"உனக்கு தான் போன் ல காலர் ஐடி வெச்சுருக்கேன் இல்ல, நம்பரை பாக்கவேண்டிது தான?, போம்மா, அன்னிக்கு மேட்ச் இருக்கு." என்றான் பிரவீன்.
"டேய், மேட்ச் மேட்ச் னு வேலைய காப்பாத்திக்க விட்றாத. உனக்கு ஒரு தங்கை இருக்கா, ஞாபகம் வெச்சுக்கோ." என்றாள் அமுதா.
"அம்மா, சும்மா இதே புராணம் படிக்காத, நான் முபாரக் வீட்டுக்கு போகணும், சூடா டி குடு" என்றான் பிரவீன்.
"டேய், அப்டியே என்னை ஸ்டேடியத்துல விட்று டா, வீட்ல யாரும் இல்லாதனால காலைல நான் வாக்கிங் போகல." என்றாள் அமுதா.
"அம்மா, பலமுறை சொல்லிருக்கேன், வாக்கிங் மிஸ் பண்ணாத, சுகர் பீப்பீ ஏறிடும் னு" கேக்க மாட்டியா நீ? சரி இன்னிக்கு ஈவினிங் நான் ஸ்டேடியம் ல விடறேன், நாளைல இருந்து கண்டிப்பா மார்னிங்க்ல போய்டணும் புரியுதா?" என்றபடி அமுதா கொடுத்த டீயை ருசித்தான்.
சற்றுநேரத்தில் அமுதாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான் பிரவீன்.
"ஏய் ப்ரத்தி, வீட்டை பூட்டிட்டு உள்ளேயே இரு, வேணும்னா சரண்யாவை கூப்டுக்கோ, அம்மா கொஞ்சநேரத்துல வந்துருவாங்க. நான் தான் வர லேட் ஆகும்" என்றான் பிரவீன்.
"சரி, நான் பார்த்துக்கறேன்" என்றாள் பிரதீபா.
ஸ்டேடியத்தில் அமுதாவை இறக்கிவிட்டுவிட்டு கடலூர் முதுநகர் நோக்கி வண்டியை செலுத்தினான்.
"வாடா, பிரவீன், என்னடா இது, நீ கூட என்கிட்டே முபாரக் லவ் பண்ரான் ன்னு சொல்லவே இல்ல இல்ல?" என்றார் முபாரக்கின் தந்தை.
"இல்ல வாப்பா, அப்டி இல்ல, நீங்க கோவப்பட்டிருவீங்களோன்னு தான்...." பிரவீன் முடிப்பதற்குள், "நீயும் சொல்லல அவனும் சொல்லல, அதான் கோவமே தவிர முபாரக் லவ் பண்றதுல கோவமே இல்ல, அதும் இல்லாம, நர்கீஸ் ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா, மரியாதையான பொண்ணு, எல்லாத்துக்கும் மேல நர்கீசின் அப்பா, என் வைப்போட சித்தப்பாக்கு க்ளோஸ் பிரண்டு. நல்ல டைப் அவரு" என்றார் முபாரக்கின் தந்தை.
"சரி வாப்பா, எங்க அவன், " என்று கேட்டான் பிரவீன்.
"நம்ம பேக்டரிய சுத்திக்காட்ட கூட்டிட்டு போயிருக்கான்." என்றார் முபாரக்கின் தந்தை.
சற்றுநேரத்தில் இருவரும் வந்துவிட, "டேய் மணி ஆயிருச்சு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டா, ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணனும், சோ, நீ நர்கீச விழுப்புரத்துல விட்டுட்டு வரியா?" என்றான் முபாரக்.
"டேய், லூசா டா நீ, என்னால முடியாது, வேணும்னா கூட வரேன், நான் கூட்டிட்டு போகமாட்டேன், என்ன வாப்பா இவன், அறிவில்லாம பேசறான்" என்றான் பிரவீன்.
"இல்ல பிரவீன், அவன் சொல்றது சரி தான் ரொம்ப முக்கியமான வேலை தான் அது, நீ வண்டி ல போகவேணாம், நம்ம கார் எடுத்துட்டு போ, 2526 - சாண்ட்ரோ வ." என்றார் முபாரக்கின் தந்தை.
"வாப்பா.....நீங்களுமா......சரி கூட்டிட்டு போறேன், " என்றான் பிரவீன்.
"ரொம்ப அலுத்துக்கறியே, போ டா, நடிக்காத" என்றான் முபாரக்.
"சரி டா, நீ ஒரு விஷயம் பண்ணு, கொட்டேஷன் முடிச்சுட்டு லாயர் ஆபீஸ் போவ இல்ல, அப்டியே என் அம்மாவை ஸ்டேடியம் ல இருந்து எங்க வீட்ல டிராப் பண்ணிடு." என்றான் பிரவீன்.
"சரி டா, நான் பாத்துக்கறேன், நீ கெளம்பு" என்றான் முபாரக்.
கார் விழுப்புரத்தை நோக்கி பயணப்பட்டது....
"அம்மா, நீ ஸ்டேடியம் வெளில நம்ம அருண் ஐஸ் கிரீம் கடைல வெயிட் பண்ணு, முபாரக் வருவான், உன்னை வீட்ல டிராப் பண்ணிருவான்," கால் செய்து தனது தாய்க்கு தெரிவித்தான் பிரவீன்.
"பிரவீன், எதுக்கு முபாரக் என்னை கூட்டிட்டு போய் விழுப்புரத்துல விடுன்னு சொன்னதுக்கு முடியாதுன்னு கோவப்பட்ட" என்று கேட்டாள் நர்கீஸ்.
"அது இல்ல நர்கீஸ், அவன் கொண்டு விடறது தான் சரி, அதுல நெறய ரீசன் இருக்கு, விடு, " என்றான் பிரவீன்.
"சோ, இப்பவும் நீ முழு மனசு இல்லாம தான் என்னை கொண்டுவிட சம்மதிச்சுருக்கியா?" என்றாள் நர்கீஸ்.
"என்ன இருந்தாலும் முபாரக் பண்ணது தப்பு" என்றான் பிரவீன்.
"பிரவீன், அவன்தான் ஏதோ முக்கியமான வேலை னு சொல்றான் இல்ல, வி ஹாவ் டு அண்டர்ஸ்டேன்ட் தட்" என்றாள் நர்கீஸ்.
"உன்னை விட என்ன பெரிய மயிறு வேலை" கோவப்பட்டான் பிரவீன்.
"பிரவீன், இது தேவை இல்லாத கோவம், நானே கோவப்படல, நீ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகற. முபாரக் பத்தி எனக்கு தெரியும், அவன் என்னை இப்டி உன்கூட அனுப்பிட்டு மனசுல எவ்ளோ பீல் பண்ணுவான் தெரியுமா, ஒரு காதலி தன்னை காதலிப்பவனை எவ்ளோ புரிஞ்சுக்கறாளோ அவ்ளோ பாசம் அன்யுன்யம் அதிகமாகும், நீ ஒண்ணும் கோவப்பட வேணாம். ஐ ஆம் ஆல்ரைட். இதைக்கூட நான் புரிஞ்சுக்கலன்னா நான் முபாரக் வைப்ப்னு...சாரி வைப் ஆகப்போறவள்ன்னு சொல்லிக்கறதுல எந்த அர்த்தமும் இல்ல" என்றாள் நர்கீஸ்.
ஒரு நிமிடம் ஷாக் ஆன பிரவீன், அந்த சென்டிமென்டல் உரையாடலை முடிக்க, "நர்கீஸ், நீ நல்லவளா....கெட்டவளா....." என்ற நாயகன் டயலாக்கை கூற, சிரிப்பொலியுடன் கார் விழுப்புரத்தை நோக்கி சீரான வேகத்தில் நகர்ந்தது.
பகுதி 6 முடிந்தது.
-----------------------தொடரும்----------------------