என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 5

இருவரின் வண்டிகளும் மஞ்சை மைதானத்திற்குள் பிரவேசித்தது. அங்கே கிரிக்கெட் வலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு குழு இவர்களை பார்த்ததும் பயிற்சியை நிறுத்திவிட்டு இவர்களை நோக்கி வந்தனர்.

"ஹாய் டா, ஹாலிடேய்ஸ்ல கூட ப்ராக்டீஸுக்கு ஒழுங்கா வரமாட்டீங்களாடா நீங்க" என்றபடி கோச் முதலில் வர, "ஹாய் டா...." என்றபடி அனைத்து அணி வீரர்களும் வந்தனர்.

"அது இல்ல சார், முபாரக் லவ் பண்ற பொண்ண அவங்க அப்பா பாக்கணும் னு சொன்னாரு, அதான் விழுப்புரம் போய் கூட்டிட்டு வந்தோம். சாரி சார், அதுமட்டும் இல்லாம எங்களுக்கு எல்லாம் பிராக்டீஸ் வேணுமா சார்? " நையாண்டியாய் கேட்டான் பிரவீன்.

"பேசுவ டா பேசுவ.....ஸ்டார் பிளேயர் இல்ல, அதான் இந்த வாய். உன் ஓவர் காண்பிடண்ஸ் தான் உனக்கு ஒருநாள் எதிரி ஆகப்போகுது பாரு" என்றார் கோச்.

"சார், அது வரும்போது பாக்கலாம் சார். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க," என்று கூறிவிட்டு மற்ற அணியின் உறுப்பினர்களுடன் பேசத்தொடங்கினான் பிரவீன்.

"டேய், முபாரக்.....சைலெண்டா வாப்பா சொன்னாரு..... வாப்பா சொன்னாருன்னு அடிக்கடி விழுப்புரம் போய் போய் ஒரு பாப்பாவை புடிச்சுட்ட. என்ன நர்கீஸ், பையன் ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே. உனக்கு செட் ஆவானா?" என்றான் ரியாஸ்.

"என்ன அப்டி சொல்லிட்டிங்க, ரியாஸ், அதெல்லாம் ஆகணும்...அது அவன் விதி" என்றாள் நர்கீஸ்.

"சரி தான், புளியன்கொம்பா தான் புடிச்சிருக்கான்" என்றான் விஜய்.

"ஆமாம் விஜய், முபாரக் வைப் ஆகப்போறவள், அவனோட குணத்துல பாதியாவது இருந்தா தானே பெட்டர் ஆப் ஆவேன்" என்றாள் நர்கீஸ்.

"எங்க எல்லாரோட பேரும் தெரியுமா?" என்றான் ரகு.

"ஓ, இவனுக்கு இதான வேலையே...என்னை பாக்க வருவான். நானும் ஆசையா என் பிரண்ட்ஸ்கிட்ட இன்ட்ரோ பண்ண கூட்டிட்டு போவேன்..என்னை பத்தி பேசாம உங்க புராணம் தான் படிப்பான். இதுல உங்க போட்டோ வேற காட்டுவான்." அலுத்துக்கொண்டாள் நார்கேஸ்.

"மச்சி.....அவ்ளோ பாசமா டா எங்கமேல" என்றான் வெற்றி.

"பாசமா....நம்ம எல்லாரபத்தியும் என்னென்ன சொல்லிருக்கானோ" என்றான் லெனின்.

"ஆமாம் டா....சரியாய் சொன்ன" என்றான் கதிர்.

"டேய் டேய் நாய்ங்களா, ஒரு பொண்ணு சொன்னா உடனே நம்பிடுவீங்களா, நான் உங்க பிரண்டு டா." என்றான் முபாரக்.

"அதுனாலதான் தம்பி பயமே....என்றான் ஹரி.

"சரி சரி மச்சானை டென்ஷன் ஆக்காதிங்க, சொல்லுங்க நர்கீஸ், உங்களப்பத்தி" என்றான் விஜய்.

"இருங்க....பர்ஸ்ட் உங்களப்பத்தி சொல்லிடறேன். கரெக்ட்டான்னு சொல்லுங்க" என்றபடியே ஒவ்வொருவரைப்பற்றி சொன்னாள்.

"உங்க நேம் விஜய், இது இங்க தம்பி கார்த்திக், ரெண்டு பேரும் உங்க டீம் கு விளையாடுறீங்க. நீங்க பெரியார் ஆர்ட்ஸ் காலேஜில அக்கவுன்ட்ஸ்ல இருக்கீங்க. உங்களுக்கு அம்மா மட்டும் தான். நீங்க தேவனாம்பட்டினம் மெயின் ரோட்ல இருக்கீங்க. உங்க தம்பி கார்த்திக் காலேஜ் பர்ஸ்ட் இயர், கரெக்ட்டா விஜய்?" என்றாள் நர்கீஸ். "ஹ்ம்ம்....அப்புறம்?" என்றான் விஜய்.

"நீங்க ரியாஸ், முபாரக்கோட கிளாஸ்மேட். உங்க வீடு கூத்தப்பாக்கம் ல இருக்கு, உங்களுக்கு அப்பா அம்மா ஒரு தம்பி இருக்காரு, அந்த தம்பி தான் ஷாகுல். இதோ இவர் ஷாகுல்....உங்க பிரதர். நீங்க மதினா பஸ் ஓனர். கரெக்டா ரியாஸ்?" என்றாள் நர்கீஸ்.

"அட.....பார்றா....அப்புறம்?" என்றான் ரியாஸ்.

"இது ரகு, உங்க டீம்லயே சீனியர், ஸ்டில் கல்யாணம் ஆகல, பேரன்ட்ஸ் இல்ல, இவருக்கு 2 சிஸ்டேர்ஸ் இருக்காங்க, அக்ஷயா அண்ட் அபிநயா. இவரு முபாரக் சங்கு பேக்டரி ல சூப்பர்விஸரா இருக்காரு. உங்க வீடு கம்மியம்பேட்டை ல இருக்கு. ஆம் ஐ கரெக்ட் ரகு?" என்றாள் நர்கீஸ்.

"அடடட.....மச்சான் செமயா மனசுல பதியரபோல சொல்லிருக்கான் டா நம்மள பத்தி. அப்புறம்...மேல சொல்லுங்க" என்றான் ரகு.

"இது லெனின், இவரு எம்.என்.டி.என். நடத்துற ஆஸ்ரமத்துல வளர்ந்த பெற்றோரால் கைவிடப்பட்ட நபர். 18 நாள் குழந்தையா புதூர் மலை ல முள்ளுக்காடுக்குள்ள இருந்து எடுத்தாங்க......சாரி லெனின்...."என்றாள் நர்கீஸ்.

"பரவால்ல....உண்மைய தான சொன்னீங்க. சொல்லுங்க" என்றான் லெனின்.

"உங்க ஆஸ்ரமத்துல படிக்க வெச்சு உங்கள வேலைக்கு போக சொன்னாங்க. பட், நீங்க இந்த கிரிக்கெட் விளையாட்டு, மியூசிக் இன்ஸ்டூமென்ட் கிளாஸ் நடத்தி உங்க வருமானத்தை உங்க ஆஸ்ரம்க்கே குடுக்கறீங்க. அங்க இன்னும் சேவை பண்றீங்க." என்றாள் நர்கீஸ்.

"அடடட....இவ்ளோ தெரியுமா....அப்புறம்" என்றான் லெனின்.

"இது வெற்றி அண்ட் கதிர், ஒண்ணா மெக்கானிக் ஷாப் வெச்சிருக்காங்க. இவங்களும் ஆர்பன்ஸ் தான். முபாரக் இவங்களுக்கு கடை வெச்சு குடுத்துருக்கான். கடலூர்ல பெஸ்ட் அண்ட் சீப் டூ வீலர் மெக்கானிக் இவங்க தான், இவங்க வீடு அண்ட் மெக்கானிக் ஷாப் எல்லாமே ஒண்ணு தான் அது நியூ சினிமா இறக்கத்துல தரைக்காத்த காளியம்மன் கோயில் பக்கத்துல இருக்கு. கரெக்டா பிரண்ட்ஸ்?" என்றாள் நர்கீஸ்.

"அப்டி போடு, நீங்க ஒரு நடமாடும் மெமரி கார்டு. மேல சொல்லுங்க" என்றான் கதிர்.

"இது ஹரி, சன்னதி தெருல இருக்காரு, பெரிய கம்ப்யூட்டர் ப்ரொவ்சிங் சென்டர் வெச்சு நடத்தறாரு கரெக்டா" என்றாள் நர்கீஸ்.

"எல்லாமே டாப் கரெக்ட் நர்கீஸ். நீங்க பெரிய ஆளு தான்" என்றான் ஹரி.

"இது பிரவீன், உங்க டீம் கேப்டன். முபாரக் விட்டுக்கொடுத்த போஸ்ட். ஏன்னா முபாரக்க விட பிரவீன் விளையாட்டுல விகரசா இருக்கான். அம்மா இருக்காங்க, இது அவன் தங்கை பிரதீபா, பிரவீன் இந்த இயர் ஜூன் ல தான் காலேஜ் முடிச்சான். முடிச்சுட்டு இப்போ தான் 6 மாசமா சிப்காட்ல நாகார்ஜூனா ஆயில் கார்பொரேஷன் ல கெமிஸ்ட்டா இருக்கான். பிரதீபா ப்ளஸ் ஒன் படிக்கிறா. இவங்க வண்டிப்பாளையத்துல இருக்காங்க. அண்ட் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், இது முபாரக், ஒண்ணா நம்பர் கேடி. ....ஜஸ்ட் ஜோக். இது முபாரக், கடலூர் ஓ.டீ.அப்பா பெரிய சங்கு பேக்டரி வெச்சுருக்கார், கடல் ல இருந்து எடுக்கும் சங்குகள் போலிஷ் பண்ணி பெயிண்ட் பண்ணி பல பாரின் கண்ட்ரீஸ்க்கு எக்ஸ்போர்ட் பண்ராங்க. இப்போ முபாரக் அந்த பிசுனஸ்ஸ அப்பா கூட சேர்ந்து பாத்துக்கறான். கரெக்ட்?" என்றாள் நர்கீஸ்,

"யம்மா தாயே.....மணி ஆகுது, வா வீட்டுக்கு போகலாம், நீ போட்ட பிளேடு ல பிராக்டிஸ் பண்ணக்கூட டைம் இல்லாம போயிருச்சு,வா போகலாம்." என்றான் முபாரக்.

"ஒன் மினிட், கடைசியா, நான் நர்கீஸ், ஊரு திருச்சி, இங்க விழுப்புரம் ல செட்டில்டு, விழுப்புரம் நூர் ஜிவெல்ஸ் ஓனர் அபூபெக்கர் கு ஒரே பொண்ணு. நல்லா படிக்கமாட்டேன், ஜஸ்ட் 91 பர்சண்ட்டேஜ் இன் இன்பார்மஷன் டெக்னாலஜி. அண்ணா யூனிவர்சிட்டி." நக்கலாக நாக்கை கடித்தாள் நர்கீஸ்.

"ஓகே மச்சீஸ், இந்தாங்கடா, கேஷ், இன்னிக்கு என்னோட ட்ரீட் டே. பட் நான் வரமுடியாது. ஆல்ரெடி நம்ம ராகவேந்திரா ஸ்னாக்ஸ் ல நம்ம ஸ்பெஷல் ஐட்டம்ஸ் ரெடி பண்ண சொல்லிட்டேன். முரளி அண்ணன் செஞ்சு வெச்சுருவாரு. சோ, என்ஜாய் யுவர்செல்ப். நான் கிளம்பறேன், சாரி டா." என்றபடி முபாரக் நர்கீஸை அழைத்துக்கொண்டு கிளம்ப, ப்ரவீனும் தன் தங்கையை அழைத்துக்கொண்டு வீடு சென்றான்.

"ஓகே டா, பை." அனைவரும் வழியனுப்பிவிட்டு வலைப்பயிற்சி செய்ய கிளம்பினர்.

நர்கீஸ்.....முபாரக்கின் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். புரிந்துகொள்ளுதல், பக்குவமான மனப்பாங்கு என்று இந்த சிறிய வயதில் நிரம்பிய பெண் முபாரக்கின் வாழ்க்கையில் மனைவியாக வருவது அவன் செய்த பாக்கியம்.

பாகம் 5 முடிந்தது.

---------------தொடரும்----------------

எழுதியவர் : ஜெயராமன் (1-Sep-17, 9:28 pm)
பார்வை : 321

மேலே