என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 4

விஜி நர்கீஸிடமும் காயத்ரியிடமும் என்ன கூறப்போகிறாள் என்பதை அறியும் முன்னர்,

யார் இந்த விஜி, யார் இந்த பிரவீன்? இருவருக்கும் என்ன உறவு? இந்த முபாரக், ரியாஸ், விஜய், ரகு மற்றும் ஏனைய நண்பர்கள் எப்படி நட்பால் பின்னப்பட்டிருக்கின்றனர்? பிரவீன் மீது ஏன் இந்த அக்கறை?

பயணியுங்கள் பின்வரும் கடலூர் - விழுப்புரம் இடையேயான இந்த இணைப்பு சாலையில்.

2004 டிசம்பர் 20,

பாண்டி - விழுப்புரம் நெடுஞ்சாலை, கோலியனுர் கூட்ரோடு.....

"டேய்....பிரவீன், வேகமா போகாத டா....."பின்னால் அமர்ந்திருந்த பிரவீனின் தங்கை பிரதீபா பயப்பட, "நீ பயப்படாத, நான் கண்ட்ரோல்ல தான் ஓட்றேன்" என்றான் பிரவீன்.

"முபாரக்....நீயாவது அந்த பயல மெதுவா போகச்சொல்லு..."என்றாள் முபாரக்கின் வண்டியின் பின்னால் உட்கார்ந்திருந்த முபாரக்கின் அப்போதைய காதலி இப்போதைய மனைவி நர்கீஸ்.

"ஏய்....எனக்கே அவன்தான் வண்டி ஓட்ட கத்துக்கொடுத்தான். அவன்கிட்ட போய்.....எல்லாம் அவன் சேபா தான் ஓட்டுவான்." என்றான் முபாரக்.

"நர்கீஸ்... முக்கியமான விஷயம்....வாப்பா கிட்ட பாத்து பேசு....வாப்பா என்னைவிட பிரவீனை ரொம்ப நம்புவாரு. சோ அவன்கிட்ட கொஞ்சம் கேர்புல்லா இரு....அவன் சரியான வாலு....பயங்கர கல்லூளிமங்கன்" என்றான் முபாரக்.

"நீ வேற பயமுறுத்தாத....அதெல்லாம் நான் பாத்துக்கறேன்." என்றாள் நர்கீஸ்.

"மொதல்ல நாம எங்க டீமை மீட் பண்றோம், அப்புறம் ப்ராக்டிஸ் முடிஞ்சு தான் வீட்டுக்கு போறோம்" என்றான் முபாரக்.

"டேய்....முபா.....என்னடா பிளான்?" முன்னால் சென்றுகொண்டிருந்த பிரவீன் வண்டியை மெதுவாக செலுத்தி முபாரக்கிடம் கேட்டான்.

"நீ கேக்றத பாத்தா ஏதோ பிளான் பண்ணிட்ட போல, என்னன்னு சொல்லித்தொலை...." பதிலளித்தான் முபாரக்.

"என்ன நர்கீஸ்....என்னைப்பத்தி போட்டுகுடுத்திருப்பானே....அவன் சொல்றதுல பத்து பர்சன்ட் தான் உண்மை இருக்கும்...."என்றான் பிரவீன்.

"சரியா சொன்ன பிரவீன். நெறய பொய் சொல்லுவான். பார் எக்ஸ்சாம்பல் அப்போதான் கடலூர்ல இருந்து கெளம்பிருப்பான். எங்க இருக்கன்னு கேட்டால் தோ...மாளிகைமேடு தாண்டிட்டேன் னு சொல்லுவான். அப்போ இன்னும் 20 நிமிஷத்துல விழுப்புரம் வந்துருவியா அப்டினு கேட்டால்.....ஓஹ் கண்டிப்பா.....அப்டின்னு கூசாம சொல்லுவான். கடைசியா ஒரு மணி நேரம் கழிச்சு வருவான். கேட்டா பிரவீன் கண்டரக்கோட்டை ல பாத்துட்டான். சரியான பிளேடு அவன். அரைமணி நேரம் உசுர எடுத்துட்டான். அவனை கழட்டி விட்டுட்டு வரத்துக்குள்ள போதும் போதும் னு ஆயிருச்சு அப்டின்னு சொல்லுவான்." என்றாள் நர்கீஸ்.

"ஏய்....என்ன போட்டுக்கொடுக்கறியா? அவன் என் குரூப், என்னை தான் நம்புவான்.....இல்லடா??" என்று அசடு வழிந்தான் முபாரக்...

"நம்புவேன் டா நம்புவேன்.....இரு....உன்னை என்ன பண்ணனும் னு எனக்கு தெரியும்....தேங்க்ஸ் நர்கீஸ்" என்றான் பிரவீன்.

"டேய்.....ஏதாவது பிளான் பண்ணி கவுத்துறாத டா." என்றான் முபாரக்.

"சரி சரி... லவ்வரை பக்கத்துல வெச்சுக்கிட்டு எப்படி டா மனமார இப்டி அடுத்தவன்கிட்ட கெஞ்சற....உன்னைப்பத்தி நர்கீஸ் என்ன நெனப்பா?" நிண்டிவிட்டான் பிரவீன்.

"நல்லா கோத்து விட்ரடா நீ..." என்றான் முபாரக்.

கலகலவென வந்துகொண்டிருந்த அவர்களின் வண்டிகளை வாணியம்பாளையம் - வளவனூர் சாலை சந்திப்பில் காவல் வண்டி நிறுத்தவே நின்றனர் நால்வரும்.

உள்ளே இருந்த காவல்துறை அதிகாரி அவர்களை கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க, மற்றொரு காவலாளி யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். சற்றுநேரத்தில் இணைப்பை துண்டித்துவிட்டு ஜீப்பின் அருகில் வந்தார். "என்ன சார், யாரு இவங்க" என்றவர், "டேய், எந்த ஊருடா நீங்க" என்று மிரட்டும் தோரணையில் கேட்டார்.

"சார், எதுக்கு சார் மரியாதை இல்லாம பேசறீங்க, நாங்க கடலூர் சார்' என்றான் பிரவீன்.

"என்னடா மரியாதை குடுக்கணும் உங்களுக்கு, பொண்ணுங்கள கூட்டிக்கிட்டு சுத்திட்டிருக்கிங்க" என்றார் அந்த காவல்துறை அதிகாரி.

"சார், கொஞ்சம் கண்ட்ரோலா பேசுங்க, இது என் சிஸ்டர், அது அவன் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு. " கோபமாய் பதில் அளித்தான் பிரவீன்.

"சார், ப்ளீஸ் நாங்க போகணும்" முபாரக் குறுக்கிட்டான்.

"இரு தம்பி, அவசரப்படாத" என்று முபாரக்கிடம் சொல்லிவிட்டு பிரவீன் பக்கம் திரும்பினார் அந்த காவலாளி.

"நீ என்ன பண்ற, விழுப்புரம் ஜங்க்ஷன்க்கு போய் இந்த டீடெயில்ஸ் கு டிக்கெட் புக் பண்ணிட்டு நேரா இந்த அட்ரெஸ்ல போய் குடுத்திட்டு.வா. அப்புறம் நீங்க கிளம்பலாம்" என்றார் அந்த அதிகாரி.

"ஹலோ, சார், என்ன விளையாடுறிங்களா, நாங்க போகணும், டேய் முபாரக்...வண்டிய எடு டா, என்றபடி வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தான் பிரவீன். "தம்பி, அதிகமா பண்றியே....சொன்னதை செஞ்சுட்டு வா, அதுவரை நீங்க வண்டிய ஓரம் கட்டிட்டு நில்லுங்க." என்றபடி முபாரக்கின் வண்டி சாவியை கையில் எடுத்தார்.

கோபத்துடன் வண்டியில் இருந்து இறங்கிய பிரவீனை நர்கீஸ் தடுத்தாள். "பிரவீன், நீ போய் வாங்கிட்டு வந்திடு, இங்க இருந்து ஜங்ஷன் ஜஸ்ட் பிப்ட்டின் மினிட்ஸ் தான் ஆகும். இது பீக் டைம் கூட இல்ல.அதிகபட்சம் அரைமணி நேரம் தான். நீ போ. நாங்க இந்த டி ஷாப் ல வெயிட் பண்றோம்" என்று கூறினாள்.

"குடுங்க சார்," கோபமாக சீட்டை கையில் வாங்கிக்கொண்டு "காசு???" என்றான் பிரவீன்.

"புக் பண்ணிட்டு இந்த அட்ரஸ் ல குடுத்துட்டு வா, அப்புறம் தரேன், அதுமட்டும் இல்ல... வீட்ல குடுத்துட்டு உன் பிரெண்டுக்கு போன் ல சொல்லு" மிரட்டலாக சொன்னார் அதிகாரி.

கோபத்தின் உச்சத்தில் வண்டியை மிக வேகமாக விழுப்புரத்தை நோக்கி செலுத்தினான் பிரவீன்.

பயணச்சீட்டை வாங்கிவிட்டு அந்த அதிகாரி அளித்த முகவரிக்கு சென்றான். அது வளவனூரில் உள்ள ஒரு முகவரி.

வீட்டின் காலிங் பெல்லை கோபமாக பலமுறை அழுத்திக்கொண்டே இருந்தான். உள்ளே இருந்து "ஒன் மினிட்" "ஒன் மினிட்" என்று குரல் வந்தபோதும் கோபத்தில் அழுத்திக்கொண்டே இருந்தான்.

கோபமாக வெளியில் வந்த அந்த அழகு "ஒன் மினிட்" குரலுக்கு சொந்தமான விஜயலக்ஷ்மி என்ற விஜி,
"ஹலோ....நான்தான் வரேன்னு சொல்றேன் இல்ல, சென்ஸ் இல்லாம இப்படி பெல் அடிச்சுட்டே இருக்கீங்களே, ஸ்டுபிட், யாரு நீங்க" என்றாள் விஜி.

"அது இருக்கட்டும், இந்த டிக்கெட்டை ஒரு போலீஸ்காரன் இந்த அட்ட்ரஸ்ல குடுக்கச்சொன்னான்" என்றபடி டிக்கெட்டை கொடுத்தான் பிரவீன்.

"ஹலோ....மரியாதையா பேசுங்க, அவன் இவன் னு பேசவேணாம். அது என் அப்பா." என்றாள் விஜி.

"ஓ அப்படியா, ஏங்க, வீட்ல இப்டி ஒரு யங்ஸ்டர் இருக்கீங்க, நீங்க போய் இந்த டிக்கெட் புக் பண்ணா என்ன, கடலூர் போய்ட்ருந்த என்னையும் என் பிரெண்டயும் போர்ஸ்புல்லா நிறுத்தி அவங்கள நடு ரோட்ல நிக்கவெச்சுட்டு என்னைப்போய் இந்த டிக்கெட் வாங்கி இங்க வந்து குடுத்துட்டு பின்ன வந்து காசு வாங்கிக்கணும் னு சொன்னாரு. இது அநியாயம் இல்ல? அதான் கோவத்துல சொல்லிட்டேன், சாரி" என்றான் பிரவீன்.

"ஓ அப்படியா, சாரிங்க, வெயிட் பண்ணுங்க, கேஷ் நானே தரேன்." என்றபடி உள்ளே சென்றாள் விஜி. அவளது நடை மிக நளினமாக இருக்கவே பிரவீனின் கண்கள் அவனை அறியாமல் ரசித்தன.

"இந்தாங்க, டிக்கெட் பிரைஸ் 1195 , பிளஸ் பெட்ரோல் அப்ராக்சிமேடலி 50 , கன்வீனியன்ஸ் பீஸ் 100 மொத்தம் 1350 " என்றாள் விஜி.

ஹலோ....மேடம், இந்தாங்க பாலன்ஸ் அஞ்சுரூபாய். என்றபடி நீட்ட அது உங்களுக்கு டிப்ஸ் என்றபடி கதவை தாழிட்டாள் விஜி.

பிரவீனின் வண்டி வாணியம்பாளையம் நோக்கி விரைந்தது. ஒட்டியபடியே முபாரக்குக்கு கால் செய்து டிக்கெட்டை கொடுத்துவிட்டதாக சொன்னான் பிரவீன். அதை அந்த காவலாளியிடம் கூறினான் முபாரக். மீண்டும் அந்த காவலாளி யாருக்கோ கால் செய்து பேசிவிட்டு சரி தம்பி நீங்க கிளம்புங்க என்றபடி ஜீப்பை இயக்கலானார்.

பிரவீன் வந்து சேரும்போது ஜீப் அங்கே இல்லை. "டேய், டிக்கெட் கொடுத்ததை நீ சொன்னதும் அதை நான் அந்த போலீஸ் கிட்ட சொன்னேன், உடனே அந்த ஆளு யாருக்கோ போன் செஞ்சு பேசினான். ஐ கெஸ் அவன் யாருக்கு புக் பண்ணனோ அவங்களுக்கு தான் போன் பண்ணிருக்கணும். டிக்கெட் கெடச்சுதுன்னு கண்பாம் ஆனதும் காசு குடுக்காம போய்ட்டாங்க டா." என்று கூறினான் முபாரக்.

ப்ரவீனுக்கு புரிந்தது, அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கு தன் தந்தை பணம் தர மாட்டார் என்று தெரிந்து தான் அவளே பணத்தை தந்திருக்கிறாள் என்று.

"இல்லடா, அந்த ஆளு டிக்கெட் குடுக்க சொன்ன வீட்டுக்கு போய் நான் டிக்கெட் குடுத்தேன், அங்க ஒரு பொண்ணு இருந்தா. அவ டிக்கெட் வாங்கிட்டு அதுக்கான காசையும் பெட்ரோல் போட அது இது னு சொல்லி 1350 ரூபாய் குடுத்தா டா." என்று சொல்லிக்கொண்டே வண்டியில் தங்கையை ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி செலுத்தினான் பிரவீன்.

அந்த வீட்டில் "அம்மா....இந்த அப்பா திருந்தவே மாட்டாரா, சுத்தமா எனக்கு பிடிக்கலம்மா," தனது தாயிடம் நடந்ததை கூறி கடிந்துகொண்டாள் விஜி.

"என்ன விஜி பண்றது, இந்த மனுஷன் இப்டி பண்றது எனக்கு கூடத்தான் பிடிக்கல, அதுமட்டுமில்ல, வீட்ல 2 வயசுக்கு வந்த பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு தினமும் தண்ணி அடிச்சுட்டு வந்தா ரோட்ல எல்லாரும் என்ன நெனப்பாங்க. எப்பதான் திருந்துவாரோ" அலுத்துக்கொண்டாள் விஜியின் தாய் புவனா.

இங்கே இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்க முபாரக்கும் ப்ரவீனும் கடலூரை நெருங்கி இருந்தனர்.

பாகம் 4 முடிந்தது.

------------------------தொடரும்----------------------------

எழுதியவர் : ஜெயராமன் (1-Sep-17, 7:59 pm)
பார்வை : 326

மேலே