என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 3

உயிரிருந்தும் பிணமாய் காயத்ரியோடு நடந்தாள் விஜி.

கார் நேராக கடலூர் முதுநகரில் இருந்த முபாரக்கின் வீட்டிற்குள் நுழைந்தது.

"நீங்க இந்த ரூம் ல வெயிட் பண்ணுங்க.. நான் பாத்திமாக்கும் அப்துல்லாக்கும் ஸ்கூலுக்கு போய் லஞ்ச் பாக்ஸ் குடுத்துட்டு வந்துடறேன்." என்று கூறிவிட்டு கிளம்பினாள் நர்கீஸ்.

"விஜி....இப்போ சந்தோஷமா விஜி உனக்கு, அவன் மரணம் தான் உன்னை அவன் படுத்தக்கூடிய கஷ்டம் னு சொன்னான் னு சொன்னியே... ஒரு உயிரை குடிச்சுட்டியே டி....எல்லாரும் சொல்ராங்க. பிரவீன் உன்னை லவ் பண்ணினான் னு. எல்லாரும் நான் நெனச்ச மாதிரி தப்பா இன்டர்ப்ரைட் பண்ணிருக்காங்களா? உண்மையை சொல்லு. உன்னை உயிருக்கு உயிரா....ஏன் உயிரைவிட மேலா நெனச்ச ப்ரவீனுக்கு என்ன ஒரு பரிசு குடுத்துட்ட" என்றாள் காயத்ரி.

விஜியின் மௌனம் கலையவே இல்லை.. அவள் கண்களும் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை.

"பேசு டி...மேட்ச் நடக்குறப்போ அப்படி பேசினியே...வாயத்தொற..."என்றாள் காயத்ரி.

"என் பிரவீனை நானே கொன்னுட்டேன் காயத்ரி.....ஐயோ...என்னோட பிரவீன் இனிமே எங்க பாப்பேன்....என்னை உயிரா நெனச்சானே...எவ்ளோ நாள் என்னோட தனிமைல இருந்தாலும் அவனோட கண்ணியம்.....என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போய்ட்டானே....இப்படி அவன் பலவீனமானவன் னு தெரிஞ்சிருந்தா அவன் உயிரையே போகவிட்டிருக்க மாட்டேன். நானே என் வார்த்தையால அவனை கொன்னுட்டேனே...."பிதற்றினாள் விஜி.

"என்ன டி சொல்ற.....விஜி....சரியா பேசு....என்ன சொல்ற....எதையோ மறைக்கற விஜி என்கிட்டே இருந்து....." என்றாள் காயத்ரி.

"என் பிரவீனை நான் தான் கொன்னுட்டேன். இது என் சுயநலமா....என் குடும்ப வேலியா.....என்ன இருந்தாலும் என் பிரவீன்....அவனுக்கு ஒண்ணும் தெரியாது....என்னை அவன் உலகமாவே நெனச்சான். என்னை காதலிச்சத தவற அவன் வேற எந்த தப்பும் பண்ணல. என்னை காதலிச்ச பாவம்....அவன் உயிரை நானே என் வார்த்தையால பரிச்சுட்டேனே.....அவன் இன்னிக்கு சாகல.....அவனை பத்து நாளைக்கு முன்னாடியே கொன்னுட்டேன் காயத்ரி....." பெரிய குரலில் காயத்ரியை கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் விஜி.

"விஜி.....விஜி......என்ன டி சொல்ற....புரியரபோல சொல்லு" காயத்ரி பதற்றமானாள்.

அந்த நிமிடம் விஜியின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.....:டேவிட் காலிங்"

காயத்ரி எடுத்து பேசினாள்..

"விஜி.......என்ன ஆச்சு அந்த கடலூர் பயலுக்கு....அவனுக்காக நீ எதுக்கு ஓடிப்போய் அழுதுட்டு அவனோட ஆம்புலன்ஸ் ல போன. அவனை தான் பாத்தாலே ஏதோ நெருப்புல கைவெக்கிற மாதிரி இருக்குன்னு சொன்ன....அவனை சைக்கோ னு சொன்ன.....இப்போ எங்க இருக்க" என்று கேட்டான் டேவிட்.

"ஹலோ டேவிட், நான் காயத்ரி, உங்க காதலியோட பிரண்ட். இருங்க....விஜி கிட்ட குடுக்கறேன்." என்றபடி போனை விஜய்யிடம் நீட்டி "உங்க புதிய காதலன் மேடம்" என்றாள் காயத்ரி.

செய்வதறியாது வாங்கி "சொல்லு டேவிட்" என்றாள் விஜி.

எதிர்முனையில் அவன் என்ன பேசினான் என்று தெரியவில்லை.

தேம்பி தேம்பி அழுத விஜி "டேவிட்.....ப்ளீஸ் இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க...."என்று கூறி போனை கட் செய்தாள்.

அடுத்த நொடியே அவள் கன்னத்தில் ஒரு அறை அறைந்தாள் காயத்ரி.

அந்த நேரம் நர்கீஸும் வந்துவிடவே "ஏய்....எதுக்கு விஜியை அடிக்கிற காயத்ரி..." என்று கத்தினாள் நர்கீஸ்.

"அக்கா....சும்மா இருங்க....இவளை கொன்னாலும் தப்பில்லை. பிரவீன் லவ் பண்ணுறான் னு தெரிஞ்சும் வேற ஒரு பையன லவ் பண்ணிருக்கா இந்த நாய்" என்றாள் காயத்ரி.

அதிர்ந்துபோனாள் நர்கீஸ். மெல்ல விஜியின் அருகில் உட்கார்ந்து என்ன நடந்தது என்று விஜியை தனது மடியில் சாய்த்துக்கொண்டு தலையை தடவிக்கொடுத்துக்கொண்டே கேட்டாள்.

விஜி மெல்ல பேச தொடங்கினாள்.....

பகுதி 3 முடிந்தது.

----------தொடரும்----------

எழுதியவர் : ஜெயராமன் (1-Sep-17, 4:43 pm)
பார்வை : 414

மேலே