என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 2
"இவரோட ரிலேட்டிவ்ஸ் யாராவது இருக்காங்களா..." நர்ஸ் ஒருவர் கேட்க, "நாங்க எல்லாரும் இவனோட பிரெண்ட்ஸ். என்ன போர்மாலிட்டீஸோ சொல்லுங்க. நான் கையெழுத்து போடறேன்" என்றான் முபாரக்.
"இல்ல சார், கண்டிப்பா ரிலேட்டிவ்ஸ் தான் போடணும்" என்றாள் நர்ஸ். "மேடம், புரிஞ்சுக்கோங்க, அவனுக்குன்னு யாரும் இல்லை, அவன் ஒரு அனாதை. 2004 சுனாமில இதே ஆஸ்பத்திரில தான் இவனோட குடும்பத்துல அத்தனைபேரையும் பிணமா வாங்கிட்டு போனோம், இப்போ இவனாவது நல்லா இருப்பான்.... விரும்பின பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா குடும்பமா வாழ்வான் னு நெனச்சோம், எங்க நண்பன் மேடம்.....இன்னிக்கு யாரோ ஒருத்திக்காக உசுரைவிட்டுட்டு அனாதை பிணமா கெடக்குறான்," என்று அழுதபடியே சொல்லிக்கொண்டு ஸ்டெச்சரில் வைக்கப்பட்டிருந்த பிரவீனின் உடலை பார்த்து அழுதான் முபாரக்.
"சார், புரியுது சார், பட்....இருங்க, எதுக்கும் டாக்டர்கிட்ட என்ன ப்ரொசீஜர் ன்னு கேட்டுட்டு வரேன்" என்று கூறி நர்ஸ் செல்ல, பிரவீனின் நெற்றியில் தடவியவாறே பேயறைந்தாற்போல உறைந்து நின்றிருந்தாள் விஜி. "இப்போ சந்தோஷமா விஜி உனக்கு" என்றான் முபாரக்.
"அண்ணா...இந்த நேரத்துல ஏதும் வேணாம் அண்ணா. அப்புறம் பேசிக்கலாம். அவளோட நெலமை என்னன்னு நமக்கு தெரியாது. ஆகவேண்டித மொதல்ல பாக்கலாம்" என்றாள் காயத்ரி.
"என்ன காயத்ரி பாக்கசொல்ற. அனாதை பிணமா போகவெச்சுட்டாளே இந்த பாவி...அல்லாஹ் இவளை மன்னிக்கவே மாட்டார்" என்றான் முபாரக்.
"அண்ணா....ப்ளீஸ், அப்படி எல்லாம் சொல்லாதீங்க, விஜி உங்க தங்கை போல அண்ணா" என்றாள் காயத்ரி.
"பிரவீனை காட்டிலும் யாரும் ஒசந்தவங்க இல்லம்மா எங்களுக்கு, எங்க எல்லாரோட செல்லப்பிள்ளை, விஜி மேல வெச்சிருந்த காதல தவற அவன் வேற என்னம்மா தப்பு பண்ணினான். என்னிக்காவது நாங்க உங்ககிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிருப்போமா. விஜியோட அப்பா அம்மாவை விட அவமேல உயிரை இருந்தான் இந்த பைத்தியக்காரன். அவளுக்காக என்னவெல்லாம் செஞ்சான் தெரியுமா" என்றான் ரியாஸ்.
"புரியுது அண்ணா...அனால்....."காயத்ரி முடிப்பதற்குள் "என்ன சொல்ல போற காயத்ரி, என்ன சொன்னாலும் போனவன் போனவன் தான். என்ன புரியவெக்க ட்ரை பண்ணற?" என்றான் விஜய்.
"இல்ல விஜய் அண்ணா..." மீண்டும் காயத்ரியை பேசவிடாமல் குறுக்கிட்டான் ரியாஸ் "போதும் காயத்ரி, நாங்க எல்லாரும் விஜியை எங்க குடும்பத்துல ஒருத்தியா தான் நெனச்சோம். எங்க சொந்த தங்கை போலதான் பழகினோம். பிரவீன் காதலிக்கிறான் னு ஒரே காரணம் தான். அவனோட சேந்து விஜியோட சந்தோஷத்துக்காக நாங்க எல்லாருமே சப்போட் பண்ணிருக்கோம். இன்னிக்கு அனாதையா செத்து போய்ட்டானே இதுக்கு யாரு காரணம்?" கோபப்பட்டான் ரியாஸ்.
"அண்ணா...பிரவீன் இறந்ததற்கு விஜி என்ன பண்ணுவாள். அவள் என்ன பண்ணினாள் அவனோட மரணத்திற்கு" என்றாள் காயத்ரி.
"என்ன பண்ணினாளா....உனக்கு எப்படி சொல்லி புரிய வெக்கிறது.....பொண்ணுங்கன்னா சந்தர்ப்பவாதிகள் னு லெனின் அடிக்கடி சொல்லுவான். பிரவீன்க்கிட்ட இருந்த டாலேண்ட், பணம், எல்லாத்தயும் யூஸ் பண்ணிக்கிட்டு அவனை ஒரு குப்பை போல தூக்கி போட்டுட்டா இந்த விஜி" என்றான் வெற்றி.
"இப்போ அதெல்லாம் பேசி என்ன ஆகப்போகிறது....எங்க பிரவீன் போய்ட்டான். நீ சந்தோஷமா இரு விஜி....அந்த டேவிட் கூட சந்தோஷமா இரு" என்றான் கதிர்.
காயத்ரி என்னவென்று புரியாமல் திகைத்தாள்.
"ஏய்...விஜி, போதும் நடிப்பு, பிரவீனை கொன்னுட்டு இப்போ கவலை படரப்போல நடிக்கிறியா" என்றபடி சிந்தனையற்று உறைந்து பிரவீனின் நெற்றியை தொட்டபடியே நின்றிருந்த விஜியின் கையை தட்டிவிட்டான் ரகு.
"அண்ணா....பிரவீன் லவ் பண்ண பொண்ணைதான் நீங்க இப்போ தள்ளிவிடறீங்க" கோபப்பட்டு பேசினாள் காயத்ரி.
"காயத்ரி....ப்ளீஸ் நீ இவளை கூட்டிட்டு போய்டு" என்று கூறிவிட்டு முபாரக் தனது அலைபேசியை எடுத்து பேசத்தொடங்கினான்.
விஜியின் காதுகளில் இவர்கள் பேசுவது எட்டுவதாக தோன்றவில்லை. பிரம்மை பிடித்ததை போல் நின்றிருந்தாள்.
"வாப்பா...." என்று தொடங்கி தனது தந்தையிடம் அனைத்தையும் கூறி முடித்தான் முபாரக்.
"டேய்....போஸ்ட் மார்ட்டம் பண்ணாம பாடிய தர மாட்டாங்க. நீ போய் என்ன போர்மாலிட்டீஸ் னு கேளு. " கதிருக்கு கூறினான் விஜய்.
"டேய்...நீங்க எல்லாரும் பிரவீன் வீட்டுக்கு போயிட்டு வெயிட் பண்ணுங்க." ரகு லெனின், ஹரி, கார்த்திக் மற்றும் ஷாகுலுக்கு தெரிவித்தான்.
"டேய்....நீ கிளப் கு போய் கோச்க்கிட்ட சொல்லிட்டு அவரை கூட்டிட்டு வா." வெற்றியிடம் கூறினான் ரியாஸ்.
"ரகு, நீ போய் மாலை, பாடை, சுடுகாடு எல்லாத்துக்கும் சொல்லிட்டு சுடுகாட்டுக்கு டைம் சொல்லிட்டு வா. போஸ்ட் மார்ட்டம் பண்ணின பாடி ரெண்டு மணி நேரம் மேல தாங்காது. சோ....சீக்கிரம் இன்பாம் பண்ணிடு." என்றான் விஜய்.
சற்று நேரத்தில் முபாரக்கின் குடும்பம் அங்கு வந்தது. "என்ன ஆச்சு மாமா" என்றபடி முபாரக்கின் மனைவி நர்கீஸ் பதற்றத்துடன் கேட்க, கலங்கியபடியே "பிரவீன் நம்மள எல்லாம் விட்டுட்டு போய்ட்டான்" என்று உரக்க அழுதான் முபாரக்.
"டேய்....இப்டி சின்ன புள்ள போல அழுதுட்டு நிக்காத...அடுத்து ஆகவேண்டியதை பாரு" என்றார் முபாரக்கின் தந்தை.
"டேய்...முதல்ல எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போன் பண்ணி இன்னிக்கு நைட்க்கு வரமுடியாதுன்னு சொல்லிடுங்க." என்று வெளியே சென்ற அனைவருக்கும் அறிவுரை கூறி கால் செய்தான் விஜய்.
அனைவரும் தன்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று அவைவரும் காட்டிக்கொண்டிருக்க அதை உணர முடியாத சதை போர்த்திய கூடாய் உயிரற்று படுத்துக்கிடந்த பிரவீனின் உடல் போஸ்ட் மோர்டெம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது....
"சரி...நர்கீஸ், விஜியையும் காயத்ரியையும் ரொம்ப திட்டிட்டோம், அவங்கள கூட்டிட்டு போய் ஏதும் சாப்பிட குடு. எல்லாம் பார்மாலிட்டீஸ முடிச்சுட்டு நாங்க கால் பண்றோம், அப்போ நீங்க வீட்ல இருந்த கிளம்பி பிரவீன் வீட்டுக்கு நேர வந்துருங்க." என்று கூறி நர்கீஸுடன் காயத்ரியையும் விஜியையும் போகுமாறு கூறினான் முபாரக்.
"விஜி, கஷ்டமா தான் இருக்கும், உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியல. நீ நம்ம வீட்டுக்கு வா. முதல்ல வீட்டுக்கு போய் சாப்பாடு சாப்பிடுங்க. காயத்ரி நீ விஜி வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் கால் பண்ணி இன்னிக்கு முபாரக் பாய் வீட்ல நர்கீஸ் அக்காவோட இருக்கோம் னு சொல்லி விஷயத்தையும் சொல்லு" என்றாள் நர்கீஸ்.
"இல்லக்கா, வேணாம்....நானும் விஜியும் நைட் தான் வரோம் னு சொல்லிட்டு வந்திருக்கோம். எல்லாம் முடிஞ்சதும் கெளம்பி போயிடறோம்" என்றாள் காயத்ரி.
"சரி....இந்தாங்க கார் சாவி, 3158 வைட் ஸ்விப்ட் டிசையர். போய் வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்." என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு இப்போது கண் கலங்கினாள் நர்கீஸ்.
"மாமா, எப்படி மாமா நடந்துச்சு? தம்பி க்கு ஏன் இந்த நெலமை" என்றாள் நர்கீஸ்.
"இப்போ பேசற விஷயம் இல்ல நர்கீஸ், நீ கெளம்பு, விஜி கொஞ்சம் உனேசியா இருக்கா. கொஞ்சம் ஆறுதல் சொல்லு' என்று கூறி அனுப்பி வைத்தான் முபாரக்.
அந்த நேரம் பிரவீனின் உடல் பல கூறுகளாக அறுக்கப்பட்டிருந்தது போஸ்ட் மார்ட்டத்திற்காக...
பாகம் 2 முடிந்தது.
--------------தொடரும்----------------