வெறுத்தே பூமிக்குள் புதைந்தாளே-அனிதா

மருத்துவர் கனவு மண்ணானது – அரும்பு
மலரொன்று மண் போனது!
கருத்தாய் படிப்பு வீணானது – காலம்
காலனை உடன் சேர்த்த்து

கானல்நீரில் படகொன்றை ஓட்டினாள்- கல்வி
காகிதமும் அவளையே வாட்டியதே!
வேனில் குளிருக்கு இதமாகுமென்றாள்! – உயிர்
வெறுத்தே பூமிக்குள் புதைந்தாளே!

காமராசர் தந்துசென்ற கல்வி எங்கே ?- அந்த
கர்மவீரன் காட்டிய வழிக்கு சங்கே!
பூமாலை விழுந்திட எண்ணினாள் – ஆனால்
சாவினையே ஆரத் தழுவினாள்!

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியோ ?- தினம்
ஏனிந்த அவலநிலை பட்டப்படிப்பிற்கே!
வாழுமென்றே எண்ணினார் நம்பியே – பெற்றோர்
வருந்திடவே அழுகின்றார் விம்மியே!

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (3-Sep-17, 8:26 pm)
பார்வை : 94

மேலே