அனிதாவின் குரல்
ஆயிரத்தில் மதிப்பெண் இருந்தும்
ஆயிரமாயிரம் கவலைகள் இங்கே
அங்கே புதைக் குழிக்குள்
தள்ளப்படுகிறாள் ஒரு மாணவி
இங்கே இருட்டறையில்
முடக்கப் பட்டுள்ளனர் பல இளைஞர்கள்
நம் நாட்டின் நீதிமன்றங்களில் நிற்கும்
நீதி தேவதைகளின் கண்கள்
கட்டப் பட்டிருக்குமே..
உங்களுக்குத் தெரியுமா
அதனால் தான் அத்தேவதைக்கு
அனிதா என்னும்
எழிலோவிய தேவதையின் கண்ணீர்
தெரியவில்லை போலும்
ஒருவேளை வாயைத் திறக்கவே இயலாத
சிலையாக நிற்கவே
வடிவமைக்கப் பட்டுள்ளாள் போலும்..
யார் கண்டது
நாட்டின் பாரபட்சத்தை அறியா
பேதை சிறுமி தான் அவள்
ஆனால் அவள் போன்ற மேதை
இங்கே எவறும் இல்லை
அவளின் சாதி பெயர் தான்
இன்று வந்த சேதிகளில் பாதி
சர்வாதிகாரம் என்னும் ஓங்கிய கையே..
என் தேவதையை நீ உன்
விரல்களால் நசுக்கி விட்டாய்
ஆனால் ஒரு நாளேனும் உன் கைகள்
துண்டிக்கப்படும் என மறந்துவிடாதே
இருளில் உன நிழல் கூட
உன்னுடன் நிற்காது
நீதி பிறக்கும் வரை எங்கள் குரல்
ஒருபோதும் நீங்காது
மத நிலையில் மட்டுமே
நாங்கள் வேறுபட்டுள்ளோம்
தமிழன் என்ற மகத்தான
உணர்வு அனைவரிலும் ஒன்றே
ஒன்றாய் இணைவோம் தோழா
விண்ணைத்தாண்டி உயர்வோம் மேலாய்