தத்துபித்துவம்

** எல்லாவற்றையும்
சரிதான் என்பவன்
நல்லவன் அல்ல !
நண்பனும் அல்ல !

** கழுதையைக் கூட
புகழ்ந்து வை.
ஒருநாள்
கச்சேரிக்கு
உன்னை அழைக்கும்!

** ஆட்டுக்குப்
புல் வைப்பவன் எல்லாம்
அகிம்சாவாதியல்ல
கசாப்புக் கடைக்காரனாகவும்
இருக்கலாம் !

** கிறுக்குவதெல்லாம்
ஓவியமென்றால்
கோழியும் கூட
ரவி வர்மா !

** செருப்பை குறைகூறுபவனை
கூர்ந்து கவனி
அவன்
ஷூ விற்பவனாக
இருக்கக் கூடும் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (4-Sep-17, 10:31 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 95

மேலே