அனிதாவிற்கு அஞ்சலி

எட்டாக் கனியானது
ஏழைக்கு கல்வியிங்கு !
படிக்க விரும்புவது
பகல் கனவானது !
வசதிகள் உள்ளோர்க்கு
வாய்ப்புகள் கிட்டுகிறது !
வறுமையில் உழல்வோர்க்கு
வாழ்க்கை பாலையாகுது !
அரசாங்கம் இன்றோ
ஆண்டிகள் மடமானது !
அழுது தீர்த்தோம்
அனிதாவிற்கு ஒருநாள் !
அத்தோடு முடிந்ததா
அனைவரின் கடமையும் !
ஏழையின் இலட்சியம்
எரிந்தது இடுகாட்டில் !
சுட்டெரித்தது நெஞ்சை
சுடுகாட்டுக் காட்சிகள் !
தோற்றது அனிதாவல்ல
தோல்வி தமிழனுக்கும் !
நாதியற்று நிற்கிறோம்
நானிலத்தில் தமிழரும் !
அரசியல் கட்சிகளும்
அனாதைகள் ஆனதிங்கு !
பதவிக்காக அன்றாடம்
பகல்வேடம் தரிக்கிறார் !
சுயநல உள்ளங்களே
சுற்றிவருது நாட்டிலே !
இனியேனும் ஒன்றிடுவீர்
இதற்கொரு தீர்வுகாண !
நிலையான முடிவெடுக்க
நித்திரை கலையுங்கள் !
முகத்திரையைக் கிழித்திட
முன்வருக முனைப்புடன் !
உரிமைகளை மீட்டெடுக்க
உள்ளத்தால் இணந்திடுக !
அடிமைத்தனம் களைந்திடுக
அரிமாவென வெகுண்டெழுக !
தமிழராக வாழ்ந்திடுக
தமிழினமே விழித்திடுக !
சகோதரி அனிதாவிற்கு
கண்ணீர் அஞ்சலி....
பழனி குமார்