இன்று தந்தையர் தினம் ஒரு கண்ணோட்டம்

தாய் தந்தை குருவை
தெய்வமாய் நினைத்து
தினமும் தொழுதிட
வேண்டுமென்ற நியமம்
இன்னும் இருக்கிறது
நமது ஒப்பிலா இந்தியா
கலாசார வழிமரபில் -ஆனால்
ஏனோ இடையில் வந்து
புகுந்து இளைய தலைமுறையை
ஆட்டிவைக்கிறது மேலைய
கலாச்சாரம் !
நித்தம் நித்தம்
தந்தை தாய் குருவை
மனதில் இருத்தி மதித்திட
நமக்கு தந்தையர் தினம்
தாயார் தினம் கொண்டாட
தேவை இல்லை -ஏனெனில்
தினம் தினம் அவர்கள்
தினமே நமக்கு !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Sep-17, 11:26 am)
பார்வை : 75

மேலே