பருவ காலங்கள்- தங்கா கவிதைகள்
குளிர்க் காலம்
-------------------------
உச்ச குளிர்க் காலம், ஏரிகளில்
பனிக்கட்டியாய் உறைந்திருந்த நீர்
சுற்றிலும் பனிமலை-ஏராளமான
மக்கள் பனிச்சறுக்கு விளையாட்டில்
கடுங்குளிரில் உல்லாசம்
இலையுதிர்க் காலம்
-------------------------------
சாலைகள் மருங்கில் தீ சிவப்பும்
சிவப்பும் மஞ்சளும் கலந்த பூவொத்த
இலைகள் தாங்கிய மரங்கள் -விண்ணிலிருந்து
மண்ணில் வந்திறங்கிய வானவில்போல்
கண்களுக்கு விருந்து
வசந்தம்
-------------
மிதமான வெய்யலும் குளிரும்
இதமான மெல்லிய பூங்காற்று
புது தளிர்த்தாங்கிய பசுமைத்தோப்பு
பாடும் குயில்கள் கொஞ்சும் மைனாக்கள்
காதலில் காதலர்கள் அங்கும் இங்கும்
கார்க் காலம்
---------------------
சுட்டெரிக்கும் வெய்யல்,அனல்பொங்கும் காற்று
சுட்டெரிக்கும் மண்ணில் செருப்பிலாது
நடக்கும் ஏழைகள் வீட்டிற்கு தலையில்
காட்டில் பொறுக்கிய காய்ந்த சுள்ளிகள் கட்டு
தண்ணீருக்கு அலையும் கால்நடைகள்
மழைக்காலம்
--------------------------
இருண்ட வானம் மண்ணைத்தோடும்
கார்மேகக் கூட்டங்கள் வானில் அலையும்
யானைக் கூட்டம்போல் பிளிற இடியாய்
பாயும் கொடிமின்னல் நடன அரங்கேற்றம்
வானம் திறக்க கொட்டுது பெரு மழையாய்