அந்த மாலை நேர மழை நாளின் அன்று
அந்த மாலை நேர மழை நாளின் அன்று !
வெள்ளிக்கம்பிகளைப்போல் ஜில் என்று
விழும் மழைத்துளிகளை எத்தனை லாவகமாய்
உன் பிஞ்சு உள்ளங்கையில் பிடித்து விளையாடுகிறாய் !
எனக்குதான் அப்படி விளையாட தெரியவில்லை
உன்னை அக்கணத்தில் ரசிப்பது அன்றி வேறு ஒன்றும்
தெரியவில்லை எனக்கு !
ஈரக்காற்றில் அசைந்து அசைந்து உன் கூந்தல் என்னவோ
என்னை தீண்டிப்பார்ப்பதிலே ஆர்வமாய் இருக்கிறது !
எனக்கும் பிடித்து இருக்கிறது ! அந்த தீண்டல் !
இன்னும் அருகே அருகே நெருக்கமாய் வந்து வந்து
நின்றுகொள்கிறாய் (கொல்கிறாய்) குளிர்மழையிலும்
வியர்த்துக்கொட்டுகிறது எனக்கு !
சற்றே விழுந்த இடியின் ஓசையில் இறுக்கமாய்
தோள்பற்றிக்கொண்டாய் ! இன்பம் தந்த இடிக்கு
எத்தனை நன்றி சொல்வது என தெரியவில்லை எனக்கு !
தேகம் தீண்டலில் ! மோகம் கொண்டவனாய்
மாற தோன்றவில்லை
மேகம் தரும் மழை ரசிக்க உனக்கு பிடிக்கும் !
உன்னை ரசிக்க எனக்கு பிடிக்கும்
ஆதலால் !
மழையும் நின்று விடக்கூடாது !
இடியும் அவ்வப்போது அவளை
பயமுறுத்த வேண்டும் !
இதயம் இப்படியெல்லாம் ஆசைப்பட
துவங்கி விட்டது !
மின்னல் ஒளி ஒன்றும் பெரிதாய் என்னை
பாதிக்கவில்லை ! அநேரத்தில் அடிக்கடி அடிக்கடி
நீ அப்படி என்னை பார்க்காதே என்று உன்னிடம் சொல்ல
கண்டிப்பாய் என்னால் இயலவில்லை !
தூர நின்று பார்த்தாலும் ! அருகில் நின்று பார்த்தாலும்
செல்ல துயரம் என்னவோ எனக்குதானே !
ஏதோ ஒரு கவலை இதயத்தை இறுக்கமாய்
பற்றிக்கொண்டது ! மழை சீக்கிரம் நின்றுவிடுமோ என்று !
அத்தனை மகிழ்ச்சியில் இதயம் திளைத்து இருக்க !
அருகே நீ இருக்க ! இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு !
இவ்வளவு பெரிய ஓர் பேரிடி ! விழும் என்று அக்கணத்தில்
நான் எதிர்பாத்திருக்க வில்லைதான் !
மொத்தமாய் விழுந்து எல்லாம் முடிந்தது !