ஆண் பெண் ஈர்ப்பு ,பள்ளி கல்லூரி பருவத்தில்
எதிர் எதிர் வீட்டு குழந்தைகளாய்
வளர்ந்தவர்கள் அவ்விருவர்
பெண் குழந்தை ரேவதி
ஆண் குழந்தை கேசவன்
இவன் வீட்டில் அவள்
அவள் வீட்டில் இவன் என்று
ஓடியாடி வளையவந்தனர்
ஒன்றும் அறியா பாலகர்களாய்
அவர்கள் இடையில் வளர்ந்து வந்தது
குற்றமற்ற ஓர் நட்பு , ஓர் அன்பும் கூட
காலத்தின் வேகத்தை யார் தடுப்பார்
பாலகர்களாய் ஓடி ஆடிவந்த இச்சிறுவர்களை
இப்போது பருவம் வந்து தாக்கியது
இப்போது அவர்கள் சிறுவர்கள் அல்லர்
ரேவதி, அவள் இப்போது பருவ மங்கை
கேசவன்,அவன். இப்போது வாலிபன்
இருவரையும் எங்கிருந்தோ வந்து
தைத்துவிட்டன மோக முட்கள்
மங்கை அவள் இப்போதெல்லாம்
அவனோடு ஓடி விளையாடுவதில்லை
பெண்ணிற்கே உரித்தான நாணம்
அவளை இப்போது தாக்கியது-அவனோ
இப்போது அவளை ஓர் பருவ மங்கையாய்ப்
பார்த்து ப்ரம்மித்து போகிறான் -அவன்
உள்ளத்தில் காலம் இப்போது சேர்கிறது
மோகம் என்னும் உணர்வை காமத்தோடு
கலந்து, திணைமாவும் தேனும் கலந்ததொப்ப
இருவரும் பள்ளிப் பருவம் தாண்டி
கல்லூரி படிப்பில் இறுதியாண்டில் இப்போது
அவர்கள் பழைய நட்பு இப்போதும்
தொடர்கிறது ஆனால் அது
மோகமும் காமமும் கலந்த
காதலாய் மெல்ல மெல்ல அரும்ப
முடிவில் காதலாய் மலர்கிறது
இப்படி ஆண் பெண் இடையில்
வளரும் உறவை தடுத்திட முடியாது
அது இயற்கையாய் அவர்களை
தாக்கும் ஓர் இன்ப அதிர்வு
அதை உணர்ந்து அவர்கள்
வரம்புக்குள் உறவாடி வந்தால்
காதலில் அவர்கள் இன்பம் காணலாம்
நல்ல இனிய காதலராய் இனிய
கணவன் மனைவியாய் முடிவில்
காதலின் சாராம்சமாய்
இப்படி இயற்கையாய் அமையும்
உறவுகளை வீட்டு பெரியவர்கள்
அது அரும்புகையிலேயே உணர்ந்து
அதில் தவறேதும் இல்லை என்று
தாமும் உணர்ந்து அந்த சிறுசுகள்
காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும்
அதை மதித்து நடந்து கொண்டால்
காதலுக்கு ஏற்றம் உண்டு
காதலும் வாழும் காதலர்களும்