இடைவெளிதனில் இரு குருவிகள்

ஒரு ஊரில்
இரு குருவிகள்
இணைந்தே இருந்த
இரு குருவிகள்
இரு வேறு மரத்தில்
இடைவெளி எனும்
ஒரு விதியில்

இளைப்பாற ஒரு மடி
தேடியது அந்தக் குருவி
இனித்து கதை பேசிட
நினைத்தது இந்தக் குருவி

இன்புற தனது துணை
நாடியது அந்தக் குருவி
இருகை இணைத்து கிடந்திட
யாசித்தத்து இந்தக் குருவி

இடைவெளிகள் மறைந்து போகிட
விரும்பியது அந்தக் குருவி
இடம்பொருள் மறந்து போக
தொடங்கியது அந்தக் குருவி

இருப்புக்கொள்ளா மனசை அடக்கிப்
பார்த்தது அந்தக் குருவி
இறங்கிவரா ஆசையிடம் தோற்றுப்
போனது அந்தக் குருவி

தனிமையின் கூட்டுக்குள் அது
மணிக்கணக்காய் தவித்ததது
இனிமையின் காட்டுக்குள் அது
பயணிக்கத் தொடங்குகிறது

அந்தக் குருவி
இந்தக் குருவியை
அன்பாய் அழைக்குது
மூக்கும் மூக்கும்
உன் மூக்கும்
என் மூக்கும்
உரசிக்கொள்ள
தோன்றுதே என்கிறது

இந்தக் குருவி
தூங்கிக் கிடந்த
இந்தக் குருவி
ஏங்கியும் கிடந்த
இந்தக் குருவி
மெல்ல விழித்து
ம் ம் என்றது

அந்தக் குருவி
காதில் பாடிய
காதல் கானத்தில்
இந்தக் குருவி
நாணி சிரித்தது
நனைந்து குளித்தது

இந்தக் குருவியின்
ம் ம் என்ற இனிக்கும்
ம் ல் சிறகுகள் விரித்து
பறந்துப் பனித்தது
அந்தக் குருவியும்

இரு குருவிகள்
இணைந்தே இருந்த இரு குருவிகள்
இரு வேறு மரத்தில்
இரு வேறு தேசத்தில்
இடைவெளி எனும் ஒரு விதியில்

அலைபேசி அழைப்பில்
அரங்கேறி முடிந்தது
அந்தக் குருவிகளின்
அந்தப்புறக் கனவின்
அன்றய கானல் நீரூற்று .....!

தலைவனும் தலைவியும்
தொலைவின் பசித்துடித்து
அலைபேசியை அணைத்து
அக்குரல்மட்டும் குடித்து
அணைக்கப்பட்ட விளக்கு...!

தூரத்து நிலவை
அணைத்துத் தூங்கும்
சிறுமியாக அவள்
உறங்கிப் போனாள்.
தூரத்து நிலவைப்
பிடித்து விட்டச்
சிறுவனாய் அவன்
உறங்கிப் போனான் ...
அவனும் அவளும்

எழுதியவர் : யாழினி வளன் (7-Sep-17, 2:28 pm)
பார்வை : 564

மேலே