காதல்
உன்மீது நான் கொண்ட காதல்
தூய காதல் என் உள்ளம் சொல்லும்
இதை அறியாதோ உன் இதயம்
இல்லை அதை நீ பூட்டி வைத்தாயோ,
உன் மனம் கொள்ளை கொண்டவன்
வந்து திறந்திடவேண்டும் என்று-எப்படியோ
இதை அறிந்து வந்துவிட்டேன் உன் காதலன் நான்
என் காதல் திறவுகோல் கொண்டு உன்
மனதைத் திறந்து உன் இதயத்தை தரிசித்து
என் தூய காதலால் அர்ச்சிக்க உன் கண்கள்
திறந்து கடைக்கண்களால் என்னை நீ பார்க்க