சொல்லாத காதல்

பாடம் சொல்லி தந்த வாத்தியார்
நினைவில் இல்லை
சேர்ந்து படித்த தோழிகள்
தொடர்பில் இல்லை
ஜன்னல் வழியே வந்த காற்றோடே
வந்தது உன் துரு துரு பார்வை
அது மட்டும் எண்ணத்தில்
அழியவும் இல்லை .....
இது நட்பு என நானும் சொல்லவில்லை
தோழியாய் ஏற்க உனக்கும் மனமில்லை
அருகல் தான் என மனங்கள்
கொண்டாட
வாய்விட்டு கூறும் தைரியமும் நமக்கில்லை
பருவங்கள் ஓடிப் போயின
சாலையில் நீ எனை தொடர்ந்தது
ஞாபகங்கள் ஆகின
சாடை மாடையாய் பேசியவை காதில்
எதிரொலிப்புக்கள் ஆகின
உன் பாதை எங்கும் பூக்கள் ஆகின
கூடவே உனக்கான மண மேடையும்
மேள தாளமும் தயாராகின
உன் ஆகம் சாய்ந்து கைகோர்த்து செல்ல
இன்றெண்ணி என்செய்வேன்
தேய்கிறது ஏக்கங்கள்