மரணிக்க வைக்கும் இந்த மௌனத்தை
தயவு ஏதும் இன்றி
தண்டனை எதுவாகினும்
தந்து விடு !
தணிந்தே ஏற்றுக்கொள்கிறேன் !
தணலாய் எரிந்து எரிந்து என்னை
மரணிக்க வைக்கும் இந்த மௌனத்தை
மட்டும் ! தனித்து விட்டேன் !
தாங்கொண்ணா இந்த துயரத்தில்
தவித்து தவித்தே !
என் இதயம் கருகி கருகி சாம்பலாகி
விடும் போல !