இதயமே இல்லா இரக்கமற்ற உன்னிடம்

அமைதியான பூக்கள் வனத்தில்
அன்பானவள் உன் கைகோர்த்து
நடந்து கொண்டே போகிறேன் !

இதயத்திற்கு இதம் தரும் இனிய
கனவிது நேற்றைய நித்திரை பொழுதில் !

உறக்கம் விழித்து !

யாருமற்ற தனிமையில்
மிச்சமிருக்கும் மீத இரவின் பொழுதை
உறங்கா பொழுதாய் உன் நினைவால் கடத்துகிறேன் !

இனிமை தரும் கனவையும்
இன்னல் தரும் உன் நினைவையும்
உன்னிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது !

இதயமே இல்லா இரக்கமற்ற உன்னிடம் !

எழுதியவர் : முபா (8-Sep-17, 1:15 pm)
பார்வை : 335

மேலே